அண்ணாமலைக்கு மோடியிடம் இருந்து வந்த போன் கால்… மாறுகிறது அரசியல் வியூகம்… 2nd இன்னிங்க்ஸை தொடங்கிய அண்ணாமலை…

0
Follow on Google News

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை 27ம் தேதி கங்கை கொண்ட சோழ புரம் வருகிறார். இரன்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, தமிழகம் வருவதற்கு முன்பு, கடந்த ஜூலை 20ம் தேதி ஞாயிற்று கிழமை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிக நீண்ட நேரம் பேசி இருக்கிறார். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் மோடி, அந்த பயணம் குறித்த முக்கிய விஷயங்கள் என்ன என்பது குறித்து அண்ணாமலையிடம் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

தமிழகத்தில் பிரதமர் மோடி தொலைபேசியில் அடிக்கடி பேச கூடிய ஒரே நபர் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தான், இதற்கு முன்பு பாஜக தலைவராக அண்ணாமலை இருந்த போது, திண்டுக்கல்லில் நடந்த ஒரு நிகழ்வுக்கு வந்த பிரதமர் மோடி, திண்டுக்கல்லில் இருந்து மதுரை விமானம் நிலையம் சென்ற போது, தன்னுடைய காரில் அண்ணாமலையை உடன் அழைத்து சென்றார் அந்த அளவுக்கு பிரதமர் மோடியின் நம்பிக்கை கூறியவராக தமிழகத்தில் அண்ணாமலை இருந்து வருகிறார்.

இப்படி பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் நம்பிக்கை கூறிய நபராக இருந்து வரும் அண்ணாமலை வகித்து வந்த மாநில தலைவர் மாற்றத்திற்கு பின்பு, சில காலம் அமைதியாக இருந்து வந்தார். ஆனால் அண்ணாமலை அமைதியாக இருந்து வந்தாலும் கூட, தமிழக அரசியல் நிலவரம் குறித்து அமித்ஷா மற்றும் மோடி இருவரும் அண்ணாமலையை தொடர்பு கொண்டு சில ஆலோசனைகளை நடத்தி வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என உறுதி படுத்துகிறது டெல்லி வட்டாரங்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசியல் செய்ய கூடிய ஒரே ஆள் அண்ணாமலை தான், அவரை தவிர்த்து விட்டு தமிழக அரசியலில் பாஜகவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லவும் முடியாது, அதே நேரத்தில் அண்ணாமலை துணையின்றி திமுகவை வீழ்த்தவும் முடியாது என்பதை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரின் கவனத்திற்கு சமீபத்தில் சென்ற உளவு துறை ரிப்போர்ட் தெரிவித்து இருக்கிறது.

இதனை தொடர்ந்து அண்ணாமலைக்கு தமிழக பாஜகவில் அதிகாரமிக்க ஒரு பொறுப்பு வழங்கினால் மட்டுமே, கட்சி உள்ளேயும் அவரால் அதிகாரம் செலுத்த முடியும் மேலும் கட்சிக்குள் எந்த ஒரு கட்டுப்பாடு இன்றி சுதந்திரமாக திமுகவை எதிர்த்து அண்ணாமலையால் அதிரடி அரசியலை கையில் எடுக்க முடியும் என முடிவு செய்த பிரதமர் மோடி விரைவில் பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு வெளியானதும்,

அண்ணாமலைக்கு தேசிய பொதுச் செயலாளர் பதவி வழங்க முடிவு செய்துள்ளதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது. மேலும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவியுடன் சேர்த்து தென் மாநிலத்தில் தமிழகம் உட்பட முக்கிய மேலும் இரண்டு மாநிலங்களை உள்ளடக்கி பாஜக மாநில பொறூப்பாளராக அண்ணாமலையை நியமனம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தமிழக பாஜகவில் எந்த ஒரு முடிவும் எடுக்கும் பொழுது, அதில் அண்ணாமலை முக்கிய பங்காற்றும் வகையில் அதிகாரமிக்க பதவியை வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அந்த வகையில் இதற்கு முன்பு எப்படி அண்ணாமலையை சுற்றியே தமிழக அரசியல் சுழன்று கொண்டிருந்ததோ, அதே போன்று தான் இனி வரும் காலங்களிலும் அண்ணாமலையை சுற்றியே தமிழக அரசியல் சுழற இருக்கிறது என உறுதி படுத்துகிறது பாஜக டெல்லி வட்டாரங்கள்.

இந்நிலையில் அண்ணாமலை அரசியலில் அடுத்த இன்னிங்ஸை , பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழ புரம் வந்து சென்ற பின்பு தொடங்க இருக்கிறார் என்றும், அந்த வகையில் தேசிய பொதுச் செயலாளர் பதவி அண்ணாமலைக்கு உறுதி செய்யப்பட்டு விட்டது என உறுதி படுத்துகிறது டெல்லி பாஜக வட்டாரங்கள்.