தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அதே நேரத்தில் ஒரு குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை எல்லாம் பொதுவெளியில் விவாதிக்க நீங்கள் யார் என்ற விமர்சனத்தையும் அவர் சந்தித்து இருக்கிறார்.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மட்டுமின்றி பல திரைபடங்களில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார். கேரளாவை சேர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் முதன்முறையாக கரு பழனியப்பன் இயக்கத்தில் பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் நடிகை சினேகாவுக்கு அம்மாவுக்கு நடித்திருந்தார். ஆரோகணம் படத்தைத் தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மணி நெருங்கி வா முத்தமிடாதே ஹவுஸ் ஓனர் ஆர் யூ ஓகே பேபி உள்ளிட்ட சில படங்களையும் டைரக்ட் செய்து இருக்கிறார்.

சமூக அக்கறை கொண்ட இந்த படங்கள் நல்ல திரைப்படங்களாக ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இருக்கின்றன. நடிகையாக இயக்குனராக தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பளராக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய ஒரு அறிமுகத்தை வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் ஆண்கள், பெண்கள் செய்யும் தவறுகளை துரோகங்களை பழிவாங்கும் செயல்களை குடும்பத்தில் அதனால் ஏற்படும் பிரச்னைகளை லட்சுமி ராமகிருஷ்ணன் சமூகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் வாழ்க்கை சிக்கல்களுக்கு மனித மனங்களின் குரூரமும் தவறான எண்ணங்களும்தான் காரணம் என்பதை பலமுறை தெளிவுபடுத்தி பேசியிருக்கிறார்.
அதேபோல் அந்த நிகழ்ச்சியில், என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என்ற இவரது டயலாக் இணையத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகி இப்போதும் அந்த டயலாக் வைரலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. லட்சுமி ராமகிருஷ்ணன் இப்போது குக் வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சமையல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் தனது கல்லூரி நாட்களில் நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். அது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது, நான் கல்லூரியில் படிக்கும்போது நடிகர் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகையாக இருந்தேன். அவரிடம் என் காதலை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தேன்.
அப்போது ஒரு முறை அவரை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அவர் என்னை பார்த்தவுடன், என்னடி தங்கச்சி எப்படி இருக்கே என்று கேட்டுவிட்டார். அவர் கூறிய அந்த தங்கச்சி என்னும் வார்த்தையை கேட்டவுடன் என் மனதில் இருந்த காதல் உணர்வுகள் அனைத்தும் மரம் போல முறிந்து விழுந்தது போல் உணர்ந்தேன். அதனால் என் காதலை அவரிடம் சொல்லவே முடியவில்லை என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறி இருக்கிறார். கமல்ஹாசனிடம் காதலை சொல்ல சென்ற லட்சுமி ராமகிருஷ்னன் காதலை சொல்வதற்கு முன்பே பிரேக் ஆப் செய்து விட்டாரே என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருவது குறிபிடத்தக்கது.

