வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக – அதிமுக இரண்டு கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது, அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான நிலையில், கடந்த 2019 முதல் வலுவான கூட்டணியாக இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வந்த திமுக கூட்டணி சல்லி சல்லியாக உடையும் பரிதாபத்தில் இருந்து வருகிறது.
இதற்கு முன்பு அதிமுக – திமுக இரண்டு கட்சிகளை விட்டால் வேறு எந்த கட்சிக்கும் கூட்டணிக்கு செல்ல முடியாத ஒரு சூழல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு இருந்து வந்தது. ஆனால் தற்பொழுது நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்கிய தங்களுடன் வரும் கூட்டணி கட்சிக்கு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கிற மிக பெரிய சலுகை கொடுத்து, திமுக கூட்டணி கட்சிகளுக்கு தூண்டிலை போட்டு விட்டார்.

இந்நிலையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சுமை 45 தொகுதிகள் வரை கேட்ட காங்கிரஸ் கட்சிக்கு மிக குறைந்த தொகுதிகளை கொடுத்து, அதுவும் அப்போது இருந்த காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கண்ணீர் விட்டு பேட்டியில் கதறி, கூட்டணி பேச்சுவார்த்தையின் போது போதிய மரியாதை இல்லை என பேசி நிகழ்வுகளெல்லாம் அரங்கேறியது, அந்த வகையில் கதறி அழுது , கெஞ்சி கூத்தாடி திமுகவிடம் தொகுதிகளை பெற்றது காங்கிரஸ்.
இந்நிலையில் தற்பொழுது புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், திமுக மற்றும் பாஜக இரண்டு காட்சிகளை தவிர்த்து அணைத்து காட்சிகளையும் கூட்டணியில் இணைக்க தயார் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி அமைக்க ரகசியமாக ராகுல் காந்தியுடன் நடிகர் விஜய் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.
ராகுல் காந்தி உடன் விஜய் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திய பின்பே, டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் இருந்து திமுக கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு மறைமுக உத்தரவு வந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்பே தமிழக காங்கிரஸ் தலைவர்களும், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கிற முழக்கத்தை முன்வைத்து திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளனர்.
மேலும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு காரணத்தை தற்பொழுது காங்கிரஸ் கட்சி தேடி கொண்டிருக்கிறது என்றும், அதனால் தான் திமுக எம்பி திருச்சி சிவா பேசிய காமராஜர் குறித்த பேச்சை ஊதி பெரிதாக்கி காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுக்கு எதிராக மிக கடுமையாக பேசி வருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் முக்கிய தலைவர் திருச்சி வேலுசாமி, திமுகவை எல்லை மீறி விமர்சனம் செய்து வருகிறார்.
அதாவது காங்கிரஸ் தலைவர்களின் இந்த பேச்சு, திமுக தரப்பில் இருந்து எதாவது ஒருவர் எதிர் விமர்சனம் வைப்பார், அதை வைத்து மேலும் பிரச்சனையை பெரிதாக்கி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்கிற திட்டத்துடன் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் திருச்சி சிவா பேசிய பேச்சை சர்ச்சையாக்கி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி விஜய் உடன் கூட்டணிக்கு தயாராகி விட்டது என்றும், அதற்கு ராகுல் காந்தி சிக்னல் கொடுத்து விட்டார் என கூறப்படும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடன் கனிமொழியை வைத்து பேசி சரி செய்து கொள்வோம் என்கிற நம்பிக்கையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இருந்து வருவதாகவும், ஆனால் அதற்ககான வாய்ப்பு மிக குறைவு விஜய் – காங்கிரஸ் கூட்டணி கிட்ட தட்ட உறுதியாகி விட்டது என்கிறது டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள்.

