நடிகர் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி பிடிவாதமாக வந்தார். நடிகர் விஷால் சிங்கிளாக இருப்பதால், அவருடன் நடிக்கும் நடிகைகள் எளிதில் கிசுகிசுவில் சிக்கி விடுகின்றனர். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் விஷால் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மேலும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவியது. மேலும் அனிஷாவும் தனது இணையதள பக்கத்திலிருந்து விஷாலுடன் எடுத்த புகைப்படங்கள், நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார்.அதனை தொடர்ந்து அனிஷாவிற்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணம் முடித்தது.

இப்படி நடிகர் விஷால் , நடிகை வரலக்ஷ்மி இருவரும் காதலித்து வந்தது சினிமா வட்டாரத்தில் இருக்கும் பலருக்கும் தெரியும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கபட்ட நிலையில் இவர்கள் காதல் பிரேக் ஆப் ஆனது அதனை தொடர்ந்து நடிகை லட்சுமி மேனன் உடன் கிசு கிசுவில் சிக்கி, அடுத்து அனிஷா என்கிற பெண்ணுடன் நிச்சயம் வரை சென்று நின்றது.
இதற்கிடையில் விஷாலுக்கு மீண்டும் திருமணம் என்ற தகவல் பரவியது . நாடோடிகள் படத்தில் சசிக்குமாரின் தங்கையாகவும் விஜய் வசந்த்தின் ஜோடியாகவும் நடித்திருப்பார் அபிநயா. இவர் விஷாலுடன் பூஜை, மார்க் ஆண்டனி படங்களில் நடித்தார். இந்த சூழலில், அபிநயாவை விஷால் மணமுடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில், அபிநயா இதற்கு விளக்கம் கொடுத்தார்.
விஷால் எனக்கு நெருங்கிய நண்பர். எங்களை பற்றி வரும் வதந்தி மிக முட்டாள்தனமானது. இதையெல்லாம் வயித்து பிழைப்பிற்காக வதந்தியாக கிளப்பி விடுகிறார்கள். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நீங்கள் சந்தோஷமா இருந்தால் சரி தான்.” என்று தெரிவித்து இருந்தார் அபிநயா
இந்த நிலையில் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிய உள்ள நிலையில், நடிகர் விஷால் தனது காதலி பற்றிய அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார். அதன்படி தான் நடிகை சாய் தன்ஷிகாவை காதலிப்பதாக விஷால் அறிவித்தார். இருவரும் யோகிடா என்கிற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜோடியாக கலந்துகொண்டு தங்கள் காதலைப் பற்றியும், திருமணம் பற்றியும் அறிவித்தனர்.
அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி தனது பிறந்தநாள் அன்று தங்கள் திருமணம் நடைபெற இருப்பதாக விஷால் அறிவித்திருந்தார். இந்நிலையில் சமிபத்தில் நடிகர் விஷாலிடம் திருமணம் பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு 9 வருஷம் தாக்குப்பிடித்துவிட்டேன், இன்னும் 2 மாசம் தான். அதற்குள் நடிகர் சங்க கட்டிடம் தயாராகிவிடும். ஆகஸ்ட் 29ந் தேதி என்னுடைய பிறந்தநாள் அன்று நல்ல செய்தி வரும். தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகளை முடிக்க ஓடிக்கொண்டிருக்கிறேன்.
அந்த கட்டிடத்தில் முதல் திருமணம் என்னுடையது தான், ஏற்கனவே புக் செய்துவிட்டேன் என்று விஷால் தெரிவித்து இருந்தார். இதன்மூலம் ஆகஸ்ட் 29ந் தேதி அவரின் திருமணம் நடைபெறாது என்பதை சூசகமாக அறிவித்துள்ளார் விஷால். இந்நிலையில் விஷால் பிறந்த நாள் அன்று அவருடன் திருமணம் நடைபெறாதது தன்ஷிகாவுக்கு வருத்தமாக இருந்தாலும், காதலனை கரம் பிடிப்பதில் காத்திருப்பதில் ஒரு சுகம் தான் என ஒரு பக்கம் சாய் தன்ஷிகா காத்திருக்க, மறுப்பக்கம் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கும் வரை 47 வயதை கடந்தும் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார் விஷால்.

