கொங்கு’ மண்டலம் எனக் குறிப்பிடப்படும் மேற்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் கரூர் மாவட்டங்கள் உள்ளடக்கி உள்ளன. மொத்தம் 61 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 41 தொகுதிகளில் வெற்றி பெற்றது, திமுக கூட்டணி 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றியை பெற்றது.
தமிழகம் முழுவதும் 2021 சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றாலும், கொங்கு மண்டலத்தில் திமுக பலத்த அடி வாங்கியது, குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள கோவையில் உள்ள பத்து தொகுதி, தர்மபுரியில் உள்ள 5 தொகுதி, ஆக மொத்தம் இந்த 15 தொகுதிகளில் திமுக ஒரு தொகுதியில் கூட கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெறவில்லை, இந்த இரண்டு பகுதியிலும் அதிமுக கூட்டணி முழுமையான வெற்றியை பெற்றது.

இந்நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலம் மீண்டும் அதிமுகவுக்கு கடந்த 2021 தேர்தலில் கை கொடுத்தது போன்று கை கொடுக்குமா.? அல்லது தேர்தல் களம் நிலவரம் மாறியுள்ளதா என்பது குறித்து தனியார் நிறுவனம் எடுத்துள்ள கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. மொத்தம் கொங்கு மண்டலத்தில் உள்ள 61 தொகுதியில் கோவையில் உள்ள 10 தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக 10 தொகுதியில் வெற்றி பெற்றது போன்று இம்முறையும் 10 தொகுதியிலும் திமுகவை தோல்வி அடைய செய்து முழுமையான வெற்றியை பெரும் என்கிறது கருத்து கணிப்புகள்.
கரூரில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அணைத்து தொகுதியிலும் திமுக வெற்றி பெற்றது போன்று இம்முறையும் கரூரில் உள்ள 4 தொகுதியிலும் திமுக வெற்றி பெரும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றனர். நாமக்கலில் உள்ள 6 தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றது, இம்முறை கூடுதலாக 1 தொகுதி வெற்றி பெற்று நாமக்கல்லில் மூன்று தொகுதியில் அதிமுகவும், 2 தொகுதியில் திமுகவும், 1 தொகுதி கடும் இழுபறியில் இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
திருப்பூரில் உள்ள 8 தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக 5 தொகுதியிலும் திமுக 3 தொகுதியிலும் வெற்றி பெற்றது ஆனால் வரும் 2026 தேர்தலில் அதிமுக அதே 5 தொகுதியிலும் திமுக 2 தொகுதியிலும் இழுபறியில் 1 தொகுதியும் உள்ளது என்கிறது கருத்துக்கணிப்புகள். கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக 10 தொகுதியிலும், திமுக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றது.
ஆனால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக 8 தொகுதியிலும் திமுக 3 தொகுதியிலும் வெற்றி பெரும் என்கிறது கருத்து கணிப்புகள். ஈரோட்டில் உள்ள 8 சட்டசபை தொகுதியில், அதிமுக கடந்த 2021 தேர்தலில் 5 தொகுதியிலும் , திமுக 3 தொகுதியிலும் வெற்றி பெற்றது, ஆனால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக ஈரோட்டில் 6 தொகுதியும் , திமுக 2 தொகுதியிலும் வெற்றி பெரும் என கருத்து கணிப்பு தெரிவிக்கின்றன.
நீலகிரியில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதியில் முன்றிலுமே திமுக வெற்றி பெரும் என்றும், தர்மபுரியில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும் என்கிறது கருத்து கணிப்புகள், கிருஷ்ணகிரியில் உள்ள 6 சட்டசபை தொகுதியில் 2 தொகுதி அதிமுக கூட்டணி, 2 தொகுதி திமுக கூட்டணி, 2 தொகுதி கடும் இழுபறியில் இருந்து வருகிறது என்கிறது கருத்து கணிப்புகள்.
இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் உள்ள 61 சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணி 41 தொகுதியிலும், திமுக கூட்டணி 20 தொகுதியிலும் வெற்றி பெற்றதது, ஆனால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக 39 தொகுதியிலும், திமுக 18 தொகுதியிலும் மீதம் இருக்கும் 4 தொகுதிகள் கடும் இழுபறியில் இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கொங்கு மண்டலம் வழக்கம் போல் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது என்கிறது கருத்து கணிப்புகள்.

