திமுக கோட்டையில் விழுந்த ஓட்டை… சென்னையில் முன்னேறும் அதிமுக கூட்டணி… வெளியான தொகுதி வாரியான சர்வே ரிப்போர்ட்…

0
Follow on Google News

வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், அடுத்து மீண்டும் திமுக ஆட்சியை தக்க வைக்குமா, அதிமுக கூட்டணி திமுகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுமா.என்கிற பரபரப்பு நீடித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் சென்னை மண்டலத்தில் உள்ள மொத்தம் 16 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் எந்தந்த தொகுதியில் வெற்றி பெரும் என்கிற கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

குறிப்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக தேர்தல் களம் திமுகவுக்கு சாதகமாக இருந்த நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான பின்பு, தேர்தல் களம் தலைகீழாக மாறியுள்ளது, அந்த வகையில் இந்த கூட்டணி தற்பொழுது திமுகவுக்கு மிக பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள 16 தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 16 தொகுதியிலும் திமுக வெற்றி பெற்று சென்னை திமுகவின் கோட்டை என்று மார் தட்டி கொண்டது.

ஆனால் தற்பொழுது வெளியாகியுள்ள சர்வே ரிப்போர்ட், திமுகவின் கோட்டையில் ஓட்டை விழுந்து விட்டது என்றும் சொல்லும் அளவுக்கு தேர்தல் களம் மாறி இருக்கிறது. சென்னையில் உள்ள 16 தொகுதியில், அண்ணாநகர், சேப்பாக்கம், ஆர் கே நகர், எழும்பூர், துறைமுகம், கொளத்தூர் , மயிலாப்பூர், பெரம்பூர், ராயபுரம் , சைதா பேட்டை, திரு.வி.க நகர் உட்பட 16 சட்டமன்ற தொகுதிகள் சென்னை மண்டலத்தில் உள்ளது.

இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சேப்பாக்கம் தொகுதியில் மீண்டும் திமுக வெற்றி பெரும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன, அதே போன்று முதல்வர் முக ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் திமுக வெற்றி பெரும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன, மேலும் அமைச்சர் சேகர் பாபு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் துறைமுகம் தொகுதி, அமைச்சர் மா சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சைதாப்பேட்டை தொகுதியில் மீண்டும் திமுக வெற்றி பெரும் என கருத்து கணிப்புகள் உறுதி செய்கிறது.

அதே போன்று திரு.வி.க நகர், பெரம்பூர், எழும்பூர் , வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளிலும் திமுக வெற்றி பெரும் என்கிறது கருத்து கணிப்புகள். இந்நிலையில் சென்னையில் உள்ள மொத்தம் 16 சட்டசபை தொகுதியில், மொத்தம் 8 தொகுதியில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள மற்ற 8 தொகுதிகளின் கள நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.

ராயபுரம் தொகுதியில் அதிமுக வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் , அதே நேரத்தில் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தவிர்த்து வேறு ஒருவர் போட்டியிட்டால், அந்த தொகுதியில் அதிமுக வெற்றி என்பது கடும் இழுபறியில் முடியும் என்கிறது கருத்து கணிப்பு. வேளச்சேரி, விருகம்பாக்கம் தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றி பெரும் என கருத்து கணிப்புகள் உறுதி செய்கிறது.

தி நகர் மற்றும் மயிலாப்பூர் ஆகிய தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக போட்டியிட்டால் இந்த இரண்டு தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெரும் என்கிறது கருத்துக்கணிப்புகள். மேலும் சென்னை மண்டலத்தில் உள்ள அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, ஆர் கே நகர் ஆகிய மூன்று தொகுதிகளும் கடும் இழுபறியில் இருந்து வருவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிகின்ற்றனர்.

இந்நிலையில் மொத்தம் சென்னையில் உள்ள மொத்தம் 16 சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி 8 தொகுதியிலும், அதிமுக கூட்டணி 5 தொகுதியிலும் மேலும் இழுபறியில் இருக்கும் மூன்று தொகுதிகள், தற்பொழுது திமுக மீது மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி அதிகரிக்கும் பொழுதும், மேலும் அதிமுக – பாஜக கூட்டணியின் தீவிர பிரச்சாரம் கை கொடுத்தால், இழுபறியில் உள்ள இந்த மூன்று தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது என்கிறது கருத்து கணிப்புகள்.