செந்தில் பாலாஜி உடனே ஆஜரானது எப்படி… மறைக்கப்படும் உண்மைகள்… குறிவைக்கப்பட்ட விஜய்யின் கரூர் கூட்டம்…

0
Follow on Google News

கடந்த சனி கிழமை நடிகர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள். இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அறிவித்த முதல்வர் முக ஸ்டாலின் மேலும் இறந்தவர்களுக்கு தலா 10 லட்சம் அறிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் மக்கள் மத்தியில் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

அதில் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டனா பகுதியை முதலில் தமிழக வெற்றி கழகத்தினர் தேர்வு செய்ததாக கூறப்படும் நிலையில், அந்த இடம் மறுக்கப்பட்டு நெரிசலான இடத்தை ஒதுக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பும் மக்கள். கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் சுமார் 60 ஆயிரம் பேர் கலந்து கொள்ளலாம் என தமிழக வெற்றி கழக அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக வெற்றி கழகத்திற்கு மறுக்கப்பட்டது போன்று, இதற்கு முன்பு அதிமுகவுக்கு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே இடத்தில் திமுகவுக்கு மட்டும் ஒரு முறை அல்ல இரண்டு முறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக காவல் துறைக்கு இந்த பாரபட்சம் என்கிற கேள்வியை மக்கள் எழுப்பி வருகிறார்கள்.

மேலும் கரூரில் நடந்த விஜய் கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என பெரும் கூட்டம் மிகுந்த இடத்தில் போலீசார் தடியடி நடத்த என்ன கரணம்.? போலீசாரை தடியடி நடத்த உத்தரவிட்டது யார் என்கிற சந்தேகத்தை எழுப்பி வரும் மக்கள், கரூரில் நடந்த இந்த துயர சம்பவத்திற்கு உடனே சம்பவ இடத்திற்கு வந்த முதல்வர் முக ஸ்டாலின், இதற்கு முன்பு கள்ளகுறிஞ்சி கள்ளச்சாராயம் மரணத்தின் போது ஏன் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை.

இதுவரை தமிழகத்தில் 20க்கு மேற்பட்ட லாக்கப் டெத் நடந்துள்ளது, அங்கெல்லாம் ஏன் முதல்வர் முக ஸ்டாலின் செல்ல வில்லை, வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக இதுவரை ஏன் முதல்வர் வேங்கைவயல் கிராமத்திற்கு செல்லவில்லை, மெரினாவில் முதல்வர் பங்கேற்ற விமான படை சாகச கண்காட்சியில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த நேரில் செல்லாத முதல்வர் முக ஸ்டாலின் கரூரில் நடந்த நிகழ்வுக்கு மட்டும் ஏன் அவசர அவசரமாக வர காரணம் என்ன.?

உடனே முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனைக்கு வருகிறார், அவரை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் வருகிறார், அங்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவைகளுக்கு செந்தில்பாலாஜி புகைப்படத்துடன் தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்யப்படுகிறது, இதை விட பெரிய கூட்டத்தையெல்லாம் சிறப்பாக கையாண்டு இருக்கும் நிலையில், இந்த கூட்டத்தில் எப்படி சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது என்கிற கேள்வியை எழுப்பி வரும் மக்கள்.

அதே போன்று விஜய் பேசிக்கொண்டிருத்த போதே அவரை நோக்கி செருப்பு வீசப்பட்டது, இது திட்டமிட்டு நடந்ததா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது மேலும், கூட்ட நெரிசலில் உயிர் இழந்தவர்கள் உடலை அவசரஅவசரமாக பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்ய வேண்டிய அவசரம் என்ன என்கிற சந்தேகத்துடன் பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய கடமை ஆளும் திமுக அரசுக்கு உண்டு, ஆனால் இந்த கேள்விகளுக்கு திமுக அரசு பதில் சொல்லுமா.? மௌனம் காக்குமா .? என விடை தெரியாமல் குழம்பி போய் உள்ளனர் தமிழக மக்கள்.