ரத்தாகும் தவெக அங்கீகாரம்… விஜய்யை கைது செய்ய தீவிரம்… எந்த எல்லைக்கு செல்லும் திமுக…

0
Follow on Google News

கரூர் நகர காவல் நிலையத்தில் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதன்மையான நபர்களாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் – A1 புஸ்ஸி ஆனந்த் -A2 , நிர்மல் குமார் – A3 மற்றும் மற்றும் பலருடன் சேர்த்து இவர்கள் மீது இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டமான Bharatiya Nyaya சன்ஹிட் பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதத்தை தடுக்கும் சட்டம் (TNPPDL Act) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது:

BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை

BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி

BNS பிரிவு 125(b) – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர அல்லது அலட்சிய செயல்கள்

BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை

TNPPDL Act பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், போன்ற பதிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கரூர் கூட்டத்தின்போது நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்றும் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணமாக தவெக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியும் மதுரை மானகிரியை சேர்ந்த வக்கீல் செல்வகுமார் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோலவே, சிவகங்கை மாவட்டம் ஆளவந்தான்பட்டியை சேர்ந்த வக்கீல் முருகேசன் என்பவரும், தவெகவுக்கு எதிரான மனுவை மதுரை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

கரூர் துயர சம்பவத்துக்கு காரணமான நடிகர் விஜய் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல் முருகேசன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்பதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ள நிலையில்,

தவெக கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை தந்து வருகிறது. ஆனால் தமிழக வெற்றி கழகதினர், இது ஆளும் திமுக தூண்டுதலின் பேரில் தான் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது, தொடர்ந்து திமுக கோட்டை என்று சொல்ல கூடிய திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கரூர் போன்ற பகுதிகளில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் கூடிய மக்கள் கூட்டம்.

திமுகவுக்கு கூட இவ்வளவு கூட்டம் கூட வில்லையே என்கிற ஆதங்கம், தொடர்ந்து விஜயின் பிரச்சாரத்தை முடக்க வேண்டும் என்கிற திட்டத்துடன் தான், ஆளும் திமுக அரசு மறைமுகமாக தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக வேலை செய்து வருவதாகவும், விஜயின் அரசியலை முடக்க எந்த எல்லைக்கு ஆளும் திமுகவினர் செல்வார்கள் என தவேகவினர் குற்றசாட்டுகளை வைத்து வருகிறார்கள். மேலும் விஜய் பிரச்சாரத்தின் போது அதிக அளவு ஆம்புலன்ஸ் வந்ததில் சந்தேகம் உள்ளதாகவும், ஆகையால் இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என த வெ க சார்பில் குற்றசாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதற்கு முன்பு ஆந்திராவில் நடந்த ஒரு சம்பத்திற்காக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது போன்று விஜய் கைது செய்யப்பட வேண்டும் என திமுக ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.