ஸ்லீப்பர் செல் ஆதவ் அர்ஜுன்… நம்பி மோசம் போன விஜய்…. திட்டமிட்டு பலிகடான பரிதாபம்…

0
Follow on Google News

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்காக பிரசாந்த் கிஷோர் உடன் இணைந்து வேலை செய்தவர் தான் ஆதவ் அர்ஜுன், இதனை தொடர்ந்து அவர் மனதில் அரசியல் ஆசை துளிர் விட, அடுத்து 2024 நாடளுமன்ற தேர்தலில் எம்பியாகி விட வேண்டும் என்கிற கனவில் விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்தார், திமுகவில் 3 தொகுதியை கேட்டது விசிக, 1 திருமாவளவனுக்கு , 2 ரவிக்குமாருக்கு, 3 ஆதவ் அர்ஜுனாவுக்கு.

ஆனால் திமுக இரண்டு தொகுதிக்குள் மேல் தரமுடியாது என கை விரித்து விட்டது. இருந்தாலும் கூடுதல் தொகுதி கிடைக்கும் அதிமுக பக்கம் போகலாம் என விடுதலை சிறுத்தை கட்சியை திமுக கூட்டணியில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கான ஆதவ் அர்ஜுனா முயற்சியும் தோல்வியை தழுவியது, ஆதவ் அர்ஜுன் எம்பி கனவு பலிக்கவில்லை, இதன் பின்பு திமுக கூட்டணியில் இருந்து கொண்டு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தினார் ஆதவ்.

திமுக கொடுத்த நெருக்கடி விசிகாவில் இருந்து ஆதவ் அர்ஜுன் வெளியேற்றப்பட்டார், இதன் பின்பு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் ஆதவ் அர்ஜுன், ஆனால் ஆதவ் அர்ஜுன் நடிகர் விஜயை தவறாக வழிநடத்தி ஒரு சிலீப்பர் செல் போன்று விஜயை காலி செய்து வருகிறார் என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது. விஜய் உடன் கூட்டணிக்கு பாஜக நேரடியாக அழைப்பு விடுத்தது.

விஜய்க்கு மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது ஆனால் அவரிடம் கட்டமைப்பு இல்லை, திமுகவை எதிர்க்க கட்டமைப்பு உள்ள அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்தால் ஆந்திராவில் பவன் கல்யாண் போன்று விஜய் அரசியலில் ஜொலிக்க முடியும், ஆனால் ஆதவ் அர்ஜுன் போன்றோரின் தவறான ஆலோசனையால் அதிமுக – பாஜக கூட்டணியை எதிர்த்து வருவது, வாக்குகளை விஜய் பிரிக்கலாமே தவிர அரசியலில் ஜொலிக்க முடியாது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த கரூர் விவகாரத்தில் தமிழகமே சோகத்தில் மூழ்கி இருக்க, ஆதவ் அர்ஜுன் செய்த ஒரு செயல் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மத்தியிலே கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போன்று ஆதவ் அர்ஜுனா ஒரு பதிவு செய்து இருந்தார், அதில் சாலையில் நடந்து சென்றாலே தடியடி… சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது….

இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!

இவ்வாறு ஆதவ் அர்ஜுன் தெரிவித்துள்ளார். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே , ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பதிவு வன்முறையை தூண்டும் வகையிலான கருத்து என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சர்ச்சைகள் வலுத்த நிலையில் தான் அந்தப் பதிவை ஆதவ் அர்ஜுனா நீக்கியிருக்கிறார். அதேநேரம் அவர் பதிவு குறித்த ஸ்கிரீன்ஷாட் வைரலாகி வருகிறது.

இதற்கு தவெக தொண்டர்கள், ஏன் தூண்டி விடுற, இருக்குறவன் வாழ்க்கையும் போகணுமா.? இன்றைய திமுக ஆட்சியின் வெற்றிக்கு நீ தான வேலை பார்த்த அதுக்கு முன்ன திமுக நல்ல கட்சியா.? உனக்கு MP seat கொடுத்து இருந்தா நீயும் திமுக க்கு தானே வேலை பார்த்துட்டு இருந்திருப்ப.! நீ ஒரு சிலீப்பர் செல் என தவெக தொண்டர்கள் ஆதவ் அர்ஜுனா வுக்கு எதிராக பதிவு செய்து வருகிறார்கள்.