கடனில் மூழ்கிய ரோபோ சங்கர் குடும்பம்… தாலி கூட இல்லை… யார் காப்பாற்ற போகிறார்கள்..

0
Follow on Google News

சமீபத்தில் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் திடீரென காலமானார்.இந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பரும் சின்னத்திரை கலைஞருமான நாஞ்சில் விஜயன் ஒரு நேர்காணலில் ரோபோ சங்கர் குறித்த பல விஷயங்களை பேசி இருக்கிறார். அவர் கூறிய பல தகவல்கள் அதிகளவில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

சமூக வலைதளங்களில் ரோபோ சங்கரின் உடல்நலம் குறைவுக்கு அவரது குடிப்பழக்கம் தான் முக்கிய காரணம் என்று பலரும் கருத்துக்களை கூறி வந்தனர். இதற்கு பதில் அளித்த நாஞ்சில் விஜயன், அதுவும் ஒரு காரணமே தவிர அது மட்டும் தான் காரணம் இல்லை. ரோபோ சங்கர் ஆரம்பத்தில் மேடை கலைஞராக இருந்தபோது உடம்பில் பூசிக் கொண்டிருந்த பெயிண்ட், ஓயாது உழைப்பு என எல்லாம் சேர்ந்துதான் அவரது உடல் நலக்குறைவுக்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் நாஞ்சில் விஜயன் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோபோ சங்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்புக்கே சென்றார். ஆனால் அவரது மனைவி பிரியங்கா போராடி அவரை அந்த பழக்கத்திலிருந்து மீட்டு வந்தார். ஆனால் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்த அவரை எந்த தொலைக்காட்சியும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று நடிக்க வாய்ப்பு கொடுத்தது இல்லை.

சினிமாவில் டிவி நிகழ்ச்சிகளில் வாய்ப்பு இல்லாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரோபோ சங்கர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். சென்னை வளசரவாக்கத்தில் அவர் இருக்கும் வீட்டுக்கு மட்டுமே மாதம் ஒரு லட்சம் ரூபாய் இஎம்ஐ கட்ட வேண்டும். இந்த சூழ்நிலையில் அவரும் ஓடி ஓடி உழைத்திருக்கிறார். இதுவும் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம்.

ரோபோ சங்கர் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தபோது 50 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டது. அவ்வளவு பணத்தை செலவு செய்துதான் அவரது மனைவி பிரியங்கா அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட போது மருத்துவ செலவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள். இந்திரஜா தாலி உட்பட அத்தனை நகைகளையும் மருத்துவமனையில் கழட்டி கொடுத்தார்.

அதேபோல இந்திரஜாவின் கணவர் கார்த்திக்கும் தனது கையில் அணிந்திருந்த செயின் மோதிரம் என அனைத்தையும் கழட்டி கொடுத்து தான் மருத்துவ செலவு செய்யப்பட்டது. அனைத்தையும் அருகில் இருந்து கண்கூடாக பார்த்தவன் நான் என்று நாஞ்சில் விஜயன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். மேலும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா குறித்து வருமானம் இல்லாததால் பல பிரமோசன்களை செய்து வருகிறார் என்று பலர் விமர்சனங்கள் வைக்கின்றனர்.

அதுகுறித்து பேசிய நாஞ்சில் விஜயன், ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதற்காக அவர்களுக்கு எந்த விதமான பிரச்னையும் இல்லை என்று நினைத்து விடக்கூடாது. ரோபோ சங்கர் குடும்பம் மிகப்பெரிய கடன் சுமையில் இருக்கிறது. அதேபோல ரோபோ சங்கரின் மனைவி இறுதி ஊர்வலத்தில் ஆடியதை சிலர் விமர்சனம் செய்கின்றனர். தனது கணவருக்கு பிடித்ததை கடைசியாக அவர் செய்தார். அதை தமிழ் மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்று அந்த நேர்காணலில் நாஞ்சில் விஜயன் கூறியிருக்கிறார்.