அமித்ஷாவை சந்திக்கும் விஜய்… ஆதவ் அர்ஜுன் விரட்டியடிப்பு… திமுகவுக்கு மிக பெரிய சிக்கல்…

0
Follow on Google News

நடிகர் விஜயின் அரசியல் வருகை அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், விஜயை தவிர்த்து அவருடைய தமிழக வெற்றி கழகத்தில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாமல் அந்த கட்சி மிக பெரிய கூட்டம் இருந்தாலும் கட்டு கோப்பு இல்லாமல் தத்தளித்து வருகிறது. குறிப்பாக நடிகர் விஜய் கட்சி தொடங்கியதும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் என மாற்று கட்சியில் இருந்து அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்கள் இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அதற்கான சாத்தியக்கூறு இதுவரை இல்லை, விஜய்க்கு அடுத்தப்படியாக, தமிழக அரசியல் குறித்த எந்த அனுபவம் இல்லாத புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுன், ஆரோக்கியசாமி போன்றோர்களால், விஜய் பின்னால் பெரும் கூட்டம் இருந்தும் அதை ஒருங்கிணைத்து வழிநடத்த இரண்டாம் கட்டம் தலைவர்கள் இல்லாமல், விஜய் ஒன் மேன் ஆர்மி போன்று கட்சியை வழிநடத்தி கொண்டிருக்கிறார்.

கரூரில் நடந்த குளறுபடிக்கும் முக்கிய காரணமும் விஜய் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாதது தான் என்கிற விமார்சனம் எழுந்துள்ளது. அதாவது விஜயிடம் ஒரு பெரும் கூட்டம் உள்ளது ஆனால், அவரிடம் கட்டமைப்பு இல்லை, அப்படி இருக்கையில் கட்டமைப்பு உள்ள ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே வரும் சட்டசபை தேர்தலில் விஜய்யால் அரசியலில் ஜொலிக்க முடியும்.

அப்படி இருக்கையில் பாஜக தரப்பில் இருந்து அதிமுக – பாஜக கூட்டணிக்கு வரும்படி விஜயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. ஆனால் ஆதவ் அர்ஜுன் மற்றும் ஆரோக்கிய சாமி போன்றவர்கள் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் , விசிக , கம்யூனிஸ்ட் கட்சிகள் நம்மிடம் கூட்டணிக்கு வருவார்கள், நீங்கள் தான் முதல்வர் வேட்பாளர், பாஜகவுடன் கூட்டணிக்கு சென்றால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கூட்டணிக்கு வராது.

மேலும் பாஜக கூட்டணிக்கு சென்றால் உங்களுக்கு துணை முதல்வர் தான் கிடைக்கும் என்றெல்லாம் விஜய்யை பாஜக கூட்டணிக்கு செல்ல விடாமல் தடுப்பதில் ஆதவ் அர்ஜுனா முக்கிய பங்காற்றி வருவதாக கூறப்படுகிறது. அதாவது ஆதவ் அர்ஜுனா திட்டமே, அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் இணைந்து விட கூடாது, கடைசி வரை காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணிக்கு வருகிறது என ஏமாற்றி காலம் கடத்தி , கடைசி நேரத்தில் திமுகவுக்கு எதிரான வாக்குகளை விஜய் மற்றும் அதிமுக இரண்டும் பிரித்து விட்டால், அது திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் இது தான் ஆதவ் அர்ஜுனா திமுகவுக்கு ஆதரவாக ஸ்லீப்பர் செல் போன்று விஜய்யை காலி செய்து வருகிறார் என்கிற விமர்சனம் எழுந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் கரூர் சம்பவம் விஜய்யை மிக பெரிய அளவில் பாதித்து விட்டது என்றும், குறிப்பாக திமுகவை தனி ஒருவனாக எதிர்க்க முடியாது, குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக துணை நமக்கு வேண்டும் என்பதை உணர்ந்த விஜய், தற்பொழுது பாஜக – அதிமுக உடன் கூட்டணி வைப்பது குறித்து யோசிக்க தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் டெல்லி செல்ல இருக்கும் விஜய், தமிழக நலன் குறித்து மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்கிறன் என்கிற போர்வையில் கூட்டணிக்காக அமித்சாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கு நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் செய்து வருவதாக கூறப்படுகிறது, இதற்கு முன்பு ஆதவ் அர்ஜுனாவை தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விரட்டி விட வேண்டும் என்கிற முடிவில் விஜய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.