கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த காலத்தில் தமிழகத்தில் மொத்த கடன் ₹5.70 லட்சம் கோடி இருந்தது, ஆனால் தற்பொழுது அது ₹9.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட திமுக ஆட்சிக்கு வந்த பின்பு மட்டுமே சுமார் ₹3.59 லட்சம் கோடி தமிழகத்தின் கடன் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு படி படியாக கடனை குறைப்போம் என சூளுரைத்தவிட்டு மேலும் தமிழகத்தை கடனில் மூழ்கடித்து விட்டது இந்த திராவிடம் ஆட்சி என்பது தற்பொழுது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
கடந்த 2024 கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்தம் மக்கள் தொகை 7.7 கோடி, மாநிலத்தில் சராசரியாக குடும்பத்திற்கு 3 அல்லது நன்கு நபர் உள்ளனர், அதனடிப்படையில் தோராயமாக தமிழகத்தில் சுமார் 2.2 கோடி குடும்பங்கள் உள்ளன, அந்த வகையில் தமிழகத்தின் மொத்த கடன் தொகையான ₹9.29 லட்சம் கோடி யை குடும்பங்களின் எண்ணிக்கையாக வகுத்தால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீது சுமார் 4.22 லட்சம் கடன் சுமை உள்ளது என மக்கள் புரியும்படி எளிமையாக சொல்லலாம்.

திமுக ஆட்சிக்கு வந்த 2021ல் தமிழகத்தில் ஒரு குடுமப்த்தின் மீது ₹2.63 லட்சமாக இருந்த கடன் தற்பொழுது கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் ₹4.22 லட்சமாக உயர்ந்துள்ளது. திமுக அரசின் நிதிதுறையில் பொறுப்பற்ற தன்மையின் காரணமாக இன்று தமிழகத்தின் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பொருளாதார ரீதிதியாக மிக பெரிய சவாலை நோக்கி உள்ளனர்.
மத்திய அரசு போதுமான நிதி தரவில்லை என தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் திமுக அரசு, அதன் தவறான நிதி நிர்வாக திறனால் தமிழகம் நிதி பற்றாக்குறைக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை முடி மறைத்து, தன்னுடைய தவறில் இருந்து தப்பித்து கொள்ளவே நிதி தொடர்ந்து மத்திய அரசு மீது குற்றம் சுமத்தி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அரசு என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் , தமிழகத்தின் வளர்ச்சியை விட , தமிழகத்தின் கடன் தொகை தான் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அந்த வகையில் அடுத்தடுத்து எப்படி கடன் வாங்குவது என்பதிலே கவனம் செலுத்தி வரும் திமுக அரசு, கடனை எப்படி படி படியாக குறைப்பது என்கிற எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு தான் , திமுக ஆட்சிக்கு வந்த 2021ல் தமிழகத்தில் ஒரு குடுமப்த்தின் மீது ₹2.63 லட்சமாக இருந்த கடன் தற்பொழுது கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் ₹4.22 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன் என சூளுரைத்து வரும் நிலையில், அவருடைய தலைமையின் கீழ் நடக்கும் திமுக ஆட்சியின் தவறான நிர்வாகத்தினால், ஒவ்வொரு தமிழனும் கடன்காரர்கள் என்கிற பட்டத்துடன், தமிழகத்தை கடனில் மூழ்கடித்து, இனி திமுக ஆட்சியில் இருக்கும் வரை தமிழகம் தலை நிமிர்ந்து நிற்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு கடன்கார மாநிலம் தமிழ்நாடு என்கிற அவ பெயரை தமிழ்நாட்டிற்கு, தமிழக மக்களுக்கு பெற்று தந்து இருக்கிறார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் என்கிற மனக்குமுறல் ஒவ்வொரு தமிழக மக்கள் மனதில் இருந்து ஆதங்கமாக வெளிப்பட தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் 2021-ல் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சுமார் 2,63,976 ரூபாய் அளவிலான கடன் சுமை இருப்பதாகத் அப்போதைய திமுக நிதி அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்து இருந்தார், ஆனால் தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினர் மீது ₹4.22 லட்சமாக கடன் உயர்ந்தது எப்படி என்பதற்கு திமுக வெள்ளை அறிக்கை விடுமா என சாமானியர்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

