தவெகாவில் அடுத்தடுத்து இணையும் 5 முக்கிய புள்ளிகள்… நேரடியாக டீல் செய்யும் விஜய்… ஓரம் கட்டப்பட்ட புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், அதாவ அர்ஜுனா..

0
Follow on Google News

தமிழக வெற்றி கழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர், மூத்த அரசியல் வாதி செங்கோட்டையன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டையன் இணைய இருக்கும் செய்திகள் வெளியான பின்பே, தவெகவுக்கு ஒரு அரசியல் கட்சிக்காக ஒரு தோற்றம் உருவாக தொடங்கி இருக்கிறது. இதுவரை புஸ்ஸி ஆனந்த், ஆதவா அர்ஜுனா, நிர்மல் குமார், போன்ற கத்து குட்டிகளை வைத்து கொண்டு விஜய் எதிர்கொண்ட கரூர் பிரச்சனையே போதும் போதும் என்கிற அளவுக்கு , இவர்கள் நம்முடைய அரசியலுக்கு செட்டாக மாட்டார்கள் என்று விஜய்க்கு புரிய வைத்துள்ளது.

குறிப்பாக விஜய் கட்சி தொடங்கியதும், பல முக்கிய அரசியல் தலைவர்கள் தவெகவில் இணைய முன் வந்துள்ளனர், ஆனால் தவெக ஏற்கனவே விஜய்யை சுற்றி இருக்கும் டம்மி பீசுகளான புஸ்ஸி ஆனந்த் ,நிர்மல் குமார், ஆதவா அர்ஜுனா போன்றோர் எங்கே பிரபலமான முக்கிய தலைகள் தவெகவில் இணைந்தால் நமக்கு முக்கிய துவம் இருக்காது என்கிற அச்சத்தில் , எந்த ஒரு முக்கிய தலைவர்களும் தவெகவில் இணைய விடாமல் பார்த்து கொண்டனர்.

இதன் காரணமாக தான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருந்த காளியம்மாள் இது வரை இனைய வில்லை என்றும், அதிமுக முக்கிய தலைவர் மருது அழகுராஜ் தவெகவில் இணைய முயற்சி செய்த போது, விஜய்யை சுற்றி இருக்கும் டம்மி பீசுகள் தடையாக இருந்ததாகவும், இதன் பின்பே மருது அழகுராஜ் திமுக பக்கம் சென்றார் என கூறப்படுகிறது.

இப்படி விஜய்யை சுற்றி இருக்கும் டம்மி பீசுகள் என்ன செய்கிறது என்று கூட தெரியாமல், சினிமா மூடில் அரசியல் பயணத்தை தொடர்ந்து வந்த விஜய்க்கு பலத்த அடி கொடுத்த நிகழ்வு தான் கரூர் சம்பவம், இதன் பின்பு விஜய் தன்னை சுற்றி இருக்கும் எல்லாம் டம்மி பீஸ் என்பதை புரிந்து கொண்டவர், தனக்கு நெருக்கமான ஐஏஎஸ் மற்றும் மூத்த அரசியல் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

இதன் பின்பே தன்னை சுற்றி இருக்கும் டம்மி பீஸுகள் செய்த அட்ராசிட்டி விஜய்க்கு தெரிய வந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து கரூர் விவகாரத்திற்கு பின்பு ஜான் ஆரோக்கிய சாமியிடம் மட்டுமே சில விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வரும் விஜய், செங்கோட்டையன் விவகாரத்தை தானே நேரடியாக டீல் செய்கிறேன் என் டீல் செய்து இருக்கிறார் விஜய். தவெகவில் புஸ்ஸி ஆனந்தை தூக்கி விட்டு அவர் வகித்து வரும் பொதுச் செயலாளர் பதவி தருவதாக உறுதி யளித்து இருக்கிறார் விஜய், இதன் பின்பே செங்கோட்டையன் தவெகவில் இணைவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் மருது அழகுராஜ் தவெகவில் இணைய விருப்பம் தெரிவதும் அதற்கு தடையாக இருந்தது புஸ்ஸி ஆனந்த், ஆதவா அர்ஜுன், நிர்மல் குமார் என்பதை தெரிந்து கொண்ட விஜய், இனி கட்சியில் யார் இணைய வேண்டும் என்றாலும் ஜான் ஆரோக்கிய சாமி அல்லது நானே நேரடியாக டீல் செய்து கொள்கிறேன் என்கிற முடிவுக்கு வந்து இருக்கிறார் விஜய்.

இதனை தொடர்ந்து தற்பொழுது நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் உடன் விஜய் நேரடியாக டீல் செய்து வருவதாகவும், அதே போன்று நாஞ்சில் சம்பத் , மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருடன் விஜய் நேரடியாக பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் இவர்கள் தவெகவில் இணைய வாய்ப்பு உள்ளது என்றும். இவர்கள் தவெகவில் இணைந்த பின்பு விஜய்யை சுற்றி இருக்கும் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவா அர்ஜுனா ஆகியோர் ஓரம் கட்டுப்படுவார்கள் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here