செங்கோட்டையன் திமுக பக்கம் தான் வரணும்… கடைசி வரை முயற்சித்த முக ஸ்டாலின்… செங்கோட்டையன் சொன்ன ஒரே பதில்…

0
Follow on Google News

அதிமுகவும் மூத்த தலைவர், கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைவர் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் தன்னை இணைந்து கொண்டார் , அவருக்கு தவெக வில் கொங்கு மண்டல பொறுப்பாளர் மற்றும் தவெக ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகள் கட்சியில் இணைந்த சில நிமிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கோட்டையன் தவெக செல்வதற்கு முன்பு திமுக பக்கம் இழுக்க முதல்வர் முக ஸ்டாலின் நேரடியாக டீல் செய்த தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் இருந்து வெளியேறும் தலைவர்கள் யாரும் தவெக பக்கம் சென்று விட கூடாது என்பதில் மிக தீவிரமாக இருந்து வருகிறார் முதல்வர் முக ஸ்டாலின், தமிழகம் முழுவதும் நடந்த கருத்து கணிப்பில் தவெகவுக்கு 15 சதவிகிதம் வரை வரும் தேர்தலில் வாக்கு கிடைக்கும் என்கிற தகவல் முதல்வர் முக ஸ்டாலினை மிகவும் அப்செட்டாகி உள்ளது. மேலும் அரசியல் அனுபவம் மிக்க தலைவர்கள் தவெக பக்கம் சென்றால், அந்த கட்சி கட்டமைப்பு ரீதியாக வலு பெரும் என்பதால் அரசியல் அனுபவம் மிக்க தலைவரகள் யாரும் தவெக பக்கம் செல்லாமல் இருக்கும் வகையில் தீவிரமாக கண்காணித்து வருகிறார் முதல்வர் முக ஸ்டாலின்.

அந்த வகையில் ஓபிஎஸ் தவெக பக்கம் செல்வதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ் மகன் மூலம் நடந்தது, உடனே ஓபிஎஸ் ஸை அழைத்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின், ஓபிஎஸ் க்கு இருந்த தொழில் ரீதியாக அவருக்கு வரவேண்டிய பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து மீட்டு கொடுக்க ஏற்பாடு செய்து, ஓபிஎஸ் தவெக பக்கம் செல்லாமல் பார்த்து கொண்டார் முதல்வர்.

அதே போன்று செங்கோட்டையன் தவெக செல்ல இருக்கிறார் என்கிற தகவல், முதல்வர் முக ஸ்டாலின் கவனத்திற்கு சென்றதும், கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர் முத்துசாமி மூலம் செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தை நடத்தி திமுக பக்கம் இழுத்து வர சொல்லி இருக்கிறார் முதல்வர். ஆனால் கொங்கு மண்டலத்தில் தனக்கு போட்டியாக செங்கோட்டையன் திமுகவில் வந்து விடுவார் என முத்துசாமி இதில் ஆர்வம் காட்டவில்லை.

இதனை தொடர்ந்து தவெகவில் செங்கோட்டையன் இணைவதற்கு முதல்நாள் அமைச்சர் சேகர்பாபுவை உடனே செங்கோட்டையனிடம் பேச சொல்லி இருக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின், சேகர் பாபு நேரடியாக சட்டசபையில் வைத்து தனியாக செங்கோட்டையனிடம் பேசியவர், மேலும் செங்கோட்டையன் வீட்டிற்கு சென்று தவெக வில் இணைய வேண்டாம், திமுகவில் இணைவது குறித்து பேசி இருக்கிறார் சேகர் பாபு.

ஆனால் செங்கோட்டையனுக்கு ஆரம்பத்தில் இருந்தே திமுகவில் இணைய விருப்பம் இல்லை என்றும், கொங்கு மண்டலத்தில் திமுக அமைச்சர் மூத்த சாமி மாவட்ட செயலாளராக இருக்கிறார், அவருடன் இணைந்து செங்கோட்டையன் அரசியலில் பயணிக்க முடியாது, இது தேவையில்லாத கோஷ்டி பூசலை தான் உருவாக்கும் , ஆகையால் திமுக சரியான தேர்வாக இருக்காது என்பதில் உறுதியாக இருந்த செங்கோட்டையன் இறுதி வரை திமுகவில் இணைவதற்கு பிடி கொடுக்கவில்லை.

அந்த வகையில் முதல்வர் முக ஸ்டாலின் கடைசி வரை செங்கோட்டையனை திமுக பக்கம் இழுக்க முயற்சித்து , அவருடைய முயற்சி பலனளிக்கவில்லை. மேலும் செங்கோட்டையன் தவெக இணைவதற்கான பேச்சுவார்த்தையை விஜய்யே நேரடியாக செங்கோட்டையனிடம் பேசி அவருக்கு என்ன பொறுப்பு என்பதெல்லாம் பேசி முடிவு செய்த பின்பே செங்கோட்டையன் தவெக வில் இணைய முன் வந்து இருக்கிறார், அந்த வகையில் தொடர்ந்து நேரடியாக செங்கோட்டையனை விஜய் டீலிங் செய்தால் கொங்கு மண்டலத்தில் தவெக வளரும், அதே நேரத்தில் புஸ்ஸி ஆனந்த் போன்ற அரசியல் ஞானம் இல்லாதவர்கள் செங்கோட்டையனை டீல் செய்தால் அது தவெக வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என விஜய்க்கு பலரும் அட்வைஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here