பாஜக பெண் வேட்பாளரிடம் மண்ணை கவ்வ இருக்கும் திருமாவளவன்… சிதம்பரம் தொகுதி கள நிலவரம் இதோ…

0
Follow on Google News

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். தமிழகத்தில் முழுவதும் உள்ள 39 தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் திருமாவளவன். 25 சுற்றுகளாக எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் முன்னிலை வகித்த திருமாவளவன், அடுத்தடுத்து 9 சுற்றுகள் வரை திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முன்னிலை வகித்தார்.

அடுத்தடுத்து சுற்றுகளில் மாறி மாறி இரன்டு வேட்பாளரும் முன்னிலை பெற்று வந்த நிலையில், திருமாவளவன் வெற்றி பெறுவதில் கடும் இழுபறி நீடித்தது.இறுதியாக கடும் இழுபறிக்கு மத்தியில் வெறும் 3 ஆயிரத்து 219 வாக்குகள் வித்யாசத்தில் மிக சொற்ப வாக்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திருமாவளவன். ஆனால் இந்த தேர்தலில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுமார் 62 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி கடந்த முறை மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கடும் இழுபறிக்கு மத்தியில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற திருமாவளவன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாஜக வேட்பாளர் கார்த்திகாயானி போட்டியிடுகிறார். வேலூர் மாநகராட்சி மேயராக 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் கார்த்தியாயினி. திமுக வேட்பாளர் ராஜேஸ்வரியை கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வேலூர் மேயராக வெற்றி பெற்ற கார்த்தியாயினி.

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கார்த்தியாயினி அந்த கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கார்த்தியாயினி தற்பொழுது சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை எதிர்த்து போட்டியிடுகிறார். கடந்த 5 வருடமாக எம்பியாக திருமாவளவன் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் சிதம்பரம் தொகுதி மக்கள்.

மேலும் ஆளும் திமுக அரசின் மீது உள்ள கோபம், அந்த தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு எதிராகவும், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாகவும் திரும்பியுள்ளது. தேர்தல் வந்து விட்டால் இந்து கோவில்களுக்கு வரும் திருமாவளவன், மற்ற நேரங்களில் சனாதனத்தை எதிர்ப்போம் என்று பேசுவது, குறிப்பிட்ட ஒரு பெரும்பான்மை மதத்தினர் புண் படும்படி திருமாவளவன் பேசிய பேச்சுக்கள் சிதம்பரம் தொகுதி மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட வில்லை என்பதை, அவர்களுக்கு தொல்.திருமாவளவன் மீது உள்ள கோபம் வெளிப்படுத்துகிறது.

மேலும் கடந்த தேர்தலில் வெறும் 3 ஆயிரத்து 219 வாக்குகள் வித்தியசத்தில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற திருமாவளவன், அதே தேர்தலில் சுமார் 62 ஆயிரம் வாக்குகள் வாங்கிய TTV தினகரனின் அமமுக இம்முறை பாஜக கூட்டணியில் உள்ளது பாஜக வேட்பாளராக போட்டியிடும் கார்த்தியாயினிக்கு கூடுதல் பலமாக அமைத்துள்ளது. மேலும் இந்த முறை மீண்டும் பாஜக வெற்றி பெற்று முன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்பார் என்பதில் சந்தேகத்துக்கு இடம் அளிக்காமல் உறுதியாகியுள்ளது.

அந்த வகையில் சிதம்பரம் தொகுதி வளர்ச்சி அடைய பாஜகவுக்கு வாக்களித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்பதில் மிக தெளிவாக சிதம்பரம் தொகுதி மக்கள் இருப்பதை தேர்தல் களத்தில் பார்க்க முடிகிறது, அந்த வகையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனை வீழ்த்தி பாஜக பெண் வேட்பாளர் கார்த்தியாயினி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக பிரகாசமாக இருப்பதை சிதம்பரம் தொகுதி தேர்தல் களம் உறுதி செய்வதை பார்க்க முடிகிறது.