வெளியான கருத்து கணிப்பு… மகிழ்ச்சியில் தமிழக பாஜக …. அதிர்ச்சியில் திமுக…. தலையில் துண்டை போட்ட அதிமுக…

0
Follow on Google News

நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்பார் என்பதில் சதேகத்திற்கு இடமளிக்காத வகையில், தேர்தல் தொடங்குவதற்கு முன்பே, அணைத்து கருத்து கணிப்புகளும் உறுதி செய்தன, இருந்தாலும் தென் மாநிலக்களில் பாஜக இந்த முறை எத்தனை தொகுதிகளில் வெற்றி பெரும், குறிப்பாக தமிழகத்தில் இம்முறை தாமரை மலருமா.? தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் பாஜக வெற்றி பெரும் என்கிற கேள்விகளுக்கு பதில் தரும் விதத்தில் அமைத்துள்ளது தற்பொழுது வெளியான கருத்து கணிப்பு.

பாஜக தலைவர் அண்ணாமலை மாநில தலைவராக வந்த பின்பு தமிழகத்தில் அசூர வளர்ச்சி அடைந்த பாஜக, இம்முறை தங்கள் தலைமையில் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது, அந்த வகையில் தமிழக மக்கள் மத்தியில் ஒரு அரசியல் மாற்றத்தை பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்படுத்தி வைத்திருந்தாலும், கூட்டணி அமைக்கும் விஷயத்தில் மிக கவனமாக கையாண்டு மெகா கூட்டணி என்று சொல்லும் அளவுக்கு வலுவான கூட்டணியை ஏற்படுத்தி விட்டார் அண்ணாமலை.

இந்நிலையில் வலுவான கூட்டணியுடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள பாஜகவுக்கு தமிழக தேர்தல் களம் சாதகமாவே உள்ளது. இந்நிலையில் தற்பொழுது வெளியான கருத்து கணிப்பில் தமிழகத்தில் எந்தந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளை கைப்பற்றும், ஒவ்வொரு கட்சியில் எத்தனை சதவிகிதம் வாக்குகளை பெரும் என்கிற கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

அதில் முதலில் எந்தத்த கட்சி எத்தனை சதவிகிதம் வாக்குகளை பெரும் என்பதை பார்க்கலாம், திமுகவுக்கு 32 சதவிகித வாக்குகளும், பாஜகவுக்கு 21 சதவிகித வாக்குகளும், அதிமுகவுக்கு 15 சதவிகிததிற்கும் குறைவான வாக்குகள் தான் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி, 26 முதல் 29 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 10 தொகுதிகள் வரையும் வெற்றி பெரும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், அதிமுக 1தொகுதி அல்லது அதுவும் கிடைக்காது என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகியுள்ள கருத்து கணிப்புகள் தமிழக பாஜகவினருக்கு மகிழ்ச்சியாகவும், திமுக கூட்டணிக்கு அதிர்ச்சியாக ஒரு பக்கம் இருந்தாலும், எடப்பாடி தலைமையிலான அதிமுக நடைபெற்று கொண்டிருக்கும் தேர்தல் களத்தில் சீன்லே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எடப்பாடி தலைமையிலான அதிமுக தலையில் துண்டை போட்டு தேர்தல் களத்தில் திமுக – பாஜக நேரடி மோதலை வேடிக்கை பார்க்கும் நிலையில் தான் உள்ளது.

இந்நிலையில் தென் மாநிலங்களில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெரும் என்கிற கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது, அதில் கேரளாவில் 3 தொகுதிகளும், தெலுங்கானாவில் 5 தொகுதிகளிலும், ஆந்திராவில் 3 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 22 தொகுதிகளையும், புத்திசேரியில் 1 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி தென் இந்தியாவிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் மேற்கு வங்களாம் என்னுடைய கோட்டை என கொக்கரித்து கொண்டிருக்கும் மம்தா பேனர்ஜி இந்த தேர்தலில் பலத்த அடியை சந்திக்கும் வகையில், மேற்கு வங்கத்தில் உள்ள மொத்தம் 42 தொகுதிகளில் இம்முறை பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெரும் என்கிறது கருத்து கணிப்பு. இந்நிலையில் மொத்தம், 543 தொகுதிகள் உள்ள இந்தியாவில், பாஜக 399க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்பார் என்பதில் எந்த சதேகமும் இல்லை என்பதை உறுதி படுத்தும் விதத்தில் அமைந்துளது தற்பொழுது வெளியாகியுள்ள கருத்து கணிப்பு.