இந்தந்த தொகுதியில் பாஜக தான் வெற்றி பெற போகிறது… இத்துடன் உங்க அரசியல் வாழ்க்கையே முடிச்சுச்சு… எடப்பாடிக்கு சென்ற அதிர்ச்சி ரிப்போர்…

0
Follow on Google News

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு சொல்லும்படி வாக்கு வங்கிகள் தமிழ்நாட்டில் இல்லை என்றாலும் கூட இவர்களை எல்லாம் கழட்டிவிட்டு விட்டுட்டா அல்லது எங்கே இவர்கள் யாராவது ஒருவர் வெளியே சென்றால் கூட நமக்கு மிக பெரிய பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில், இன்று தமிழ்கத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும் கூட, கடந்த தேர்தலில் எத்தனை தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியதோ அதே தொகுதியை ஒதுக்கி தன்னுடைய கூட்டணியை தக்க வைத்து கொண்டது திமுக.

அந்த அளவுக்கு கூட்டணி இல்லாமல் போட்டியிட பயந்து, ஒரு சதவிகித வாக்கு கூட தமிழகத்தில் இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளை அள்ளி கொடுத்துள்ளது திமுக. மறுப்பக்கம் சந்திரமுகி படத்தில் எப்படி கங்கா தன்னை சந்திரமுகியாக நினைத்து சந்திரமுகியாகவே மாறினாளோ, அதே போன்று கூவந்தூரில், தவழ்ந்து , உருண்டு சசிகலா காலில் விழுந்து முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி, நம்மளை மக்கள் முதல்வராக தேர்தெடுக்கவில்லை, ஜெயலலிதா மறைந்த பின்பு சசிகலா காலில் விழுந்து முதல்வரானோம் என்பதை மறைந்து,

கங்கா எப்படி சந்திரமுகியா மாறினாரோ அதே போன்று தன்னை ஜெயலலிதாவாக நினைத்து, தன்னை தானே ஆளுமை என கருதி, தொடர்ந்து அவர் தலைமையில் இதுவரை அதிமுக சந்தித்த தொடர் தோல்வியால் எட்டு தோல்வி எடப்பாடி என ஆழைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அதிமுகவை விட்டு விலகி பாஜக தலைமையில் அமைத்துள்ள கூட்டணி, இதுவரை திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கூட்டணி அமையாத என ஏங்கி கொண்டிருந்த தமிழக மக்களுக்கு கிடைத்த வர பிரசாதமாக அமைத்துள்ளது தற்பொழுது பாஜக தலைமையில் அமைத்துள்ள பாஜக கூட்டணி.

அதே நேரத்தில் பாஜகவை விட்டு விலகினால் கூட்டணிக்கு திருமாவளவன் வந்து விடுவார், சீமான் வந்துவிடுவார், காங்கிரஸ் வந்துவிடும் என கூட்டணிக்காக கதவை திறந்து வைத்து காத்திருந்த எடப்பாடிக்கு ஏமாற்றமே மிஞ்சியது, இறுதியில் பேச்சுவார்த்தைக்கு வந்த மன்சூர் அலிகான் கூட, எடப்பாடி தலைமையை ஏற்கவில்லை.

இந்நிலையில் பாஜக தலைமையில், TTV தினகரன், OPS , பாமக, என வலுவான கூட்டணியை அமைந்து திமுகவுக்கு மிக பெரிய சவாலாக தேர்தல் களத்தை சந்தித்து வரும் பாஜக, அந்த கட்சியில் வேட்பாளர் தேர்விலும் மிக கவனமாக இதற்கு மும்பு தங்கள் ஆளுமையை நிரூபித்த, மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்ட வேட்பாளர்களை களம் இறங்கி தேர்தல் களத்தை திமுக – பாஜக என்கிற நிலைக்கு கொண்டு வந்து தேர்தல் களத்தின் தனக்கு சத்தமாக மாற்றியுள்ளது பாஜக.

இந்நிலையில் தற்பொழுது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தேர்தல் களம் குறித்த ரிப்போர் அவருக்கு சென்றுள்ளது, அதில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் அண்ணாமலை, தமிழிசை சௌந்தர் ராஜன், நயினார் நாகேந்திரன், ராதிகா சரத்குமார், பொன், ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக கூட்டணியில், OPS, TTV தினகரன், சௌமிய அன்புமணி என வலுவான மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட வேட்பாளர்களை தேர்வு செய்து களம் இறக்கியுள்ளது பாஜக,

ஆனால் நீங்கள் தேர்வு செய்துள்ள வேட்பாளர் மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு சீட் கொடுத்து வேட்பாளர் தேர்விலே மிக பெரிய பின்னடைவை சந்தித்து விட்டிர்கள், தேர்தல் திமுக – பாஜகவுக்கான இரண்டு முனை போட்டியாக தான் உள்ளது, மேலும் பாஜக வெற்றி பெற இருக்கும் வேட்பாளர்களை குறிப்பிட்டு எடப்பாடியிடம் தெரிவித்து, உங்கள் தலைமையிலான அதிமுக மிக கேவலமான தோல்வியை இந்த தேர்தலின் சந்திப்பதில் மூலம் உங்கள் அரசியல் வாழ்க்கையே இந்த தேர்தலுடன் முடிவுக்கு வந்துவிடும் என்கிற அதிர்ச்சி ரிப்போர்ட் எடப்பாடிக்கு சென்றுள்ளதால் கடும் அப்செட்டில் பாஜகவை அவசரப்பட்டு பகைச்சுட்டோமா என மிகுந்த வருத்தத்தில் எடப்பாடி இருப்பதாக கூறப்படுகிறது.