சிஎஸ்கே அணியில் கோஷ்டி மோதல்… அடுத்தடுத்து தோல்விக்கு இந்த ஈகோ தான் காரணம்…

0
Follow on Google News

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது ஹோம் கிரோண்டில் முதல் இரண்டு போட்டிகளில், ஆர்சிபி, குஜராத் டைடன்ஸுக்கு எதிராக மெகா வெற்றியைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து, டெல்லிக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்திலும், சன் ரைசர்ஸுக்கு எதிராக 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்து, சிஎஸ்கே பின்னடைவை சந்தித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, டெல்லிக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்திலும், சன் ரைசர்ஸுக்கு எதிராக 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்து, சிஎஸ்கே பின்னடைவை சந்தித்துள்ளது.

சிஎஸ்கே தோல்விக்கு முக்கிய காரணம், பந்துவீச்சு படையின் சொதப்பல்தான். பேட்டர்களைவிட, பௌலர்கள் பிரச்சினைதான் பெரியதாக இருக்கிறது. இந்நிலையில், முஷ்தபிசுர் ரஹ்மானும் சிஎஸ்கேவைவிட்டு செல்ல உள்ளார். பதிரனா பந்தை எரிவதாக குற்றச்சாட்டும் இருக்கிறது. முஷ்தபிசுர் இல்லாத காரணத்தினாலும், பதிரனாவின் பந்துவீச்சில் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாலும், வெளிநாட்டு பௌலர் இல்லாமல் சிஎஸ்கே விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சன் ரைசர்ஸுக்கு எதிராக வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல், சிஎஸ்கே சொதப்பியது.
கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் சிவப்பு மண் கொண்ட விக்கெட் பயன்படுத்தப்பட்டது. மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் எனும் பெரிய ஸ்கோரை சன்ரைசர்ஸ் எட்டியது. ஆனால், அதே மைதானம்தான் ஆனால் கறுப்பு மண் கொண்ட விக்கெட்டாக இருந்தது.

இந்த விக்கெட் மாறுதலை கேப்டன் கம்மின்ஸும், சக பந்துவீச்சாளர்களும் விரைவாகப் புரிந்து கொண்டதால் தங்கள் பந்துவீச்சை அதற்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொண்டனர். இந்த கறுப்பு மண் கொண்ட விக்கெட்டில் பந்து பேட்டர்களை நோக்கி என்னதான் விரைவாக வீசினாலும் மெதுவாகவே செல்லும் என்பதைப் புரிந்துகொண்ட பந்துவீச்சாளர்கள், ஸ்லோவர் பால், ஸ்லோபவுன்சர் ஆயுதங்களைக் கையில் எடுத்தனர்.

அவர்கள் கையில் எடுத்த ஆயுதங்கள், மிகச் சரியாகப் பலன் அளித்து சிஎஸ்கே பேட்டர்களை வெல்ல முடிந்தது. ஜடேஜாவை போலவே ருதுராஜும் ஆடுகளங்களில் கேப்டன்சியில் சொதப்பிவருகிறார். அவரால் வெளி ஆடுகளத்திற்கு தகுந்தார்போலான முடிவுகளையும், ஆடுகளத்தின் தன்மை எப்படியிருக்கிறது என்று போட்டியின் போதே புரிந்துகொள்ளவும் முடியாமல் போகிறது. ஜடேஜாவை போல ருதுராஜுன் நிலைமையும் மாறிவிடக்கூடாது என்பதில் சிஎஸ்கே மற்றும் தோனி இரண்டு தரப்பும் கவனமாக இருந்துவருகிறது.

மேலும் முகேஷ் சவுத்ரி-க்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் களமிறக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் ட்ராவிஸ் ஹெட், கிளாசன், மார்க்டம் போன்ற பவர் ஹிட்டர்களுக்கு ஷர்துல் தாக்கூர் போன்ற பவுலர்கள் சரியாக இருப்பார்கள். அதேபோல் தீபக் சஹரை போன்றே ஸ்விங் செய்யும் முகேஷ் சவுத்ரியை ஏன் சிஎஸ்கே அணி தேர்வு செய்தது, தவறு என விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் சிஎஸ்கே அணியில் கோஷ்டி மோதல் நடைபெற்று வருவதாகவும், அதனால் தான் வீரர்கள் தேர்வில் தனக்கு பிடிக்காத வீரர்களை ஒதுக்குவதும், ஜால்ரா போடும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதும் தான், தொடர்ந்து சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது.