யோவ்… என்னயா செஞ்சு கிழிச்ச… கார்த்திக் சிதம்பரத்தை நாக்கை பிடுகிற மாதிரி கேட்ட மக்கள்… தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த சலசலப்பு…

0
Follow on Google News

திமுக வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தமிழ்கத்தில் பிரச்சாரம் செல்ல முடியாத அளவுக்கு மக்கள் ஆங்காங்கே தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பலர் நன்றி சொல்ல கூட தொகுதி பக்கம் வரவில்லை என்கின்ற கடும் கோபம் மக்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு எதிரான எதிர்ப்பு அலையாக உருவெடுத்து அது பாஜக கூட்டணிக்கு ஆதரவான அலையாக மாறியுள்ளது.

அதன் வெளிப்பாடாக கடந்த முறை போட்டியிட்டு வென்று மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தற்பொழுது பிரச்சரத்திற்கு செல்ல முடியாதபடி மக்கள் எதிர்த்து கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் திகைத்து வருகிறார்கள், அந்த வகையில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் திருப்புவனம் அருகே வெள்ளைக்கரை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் உள்ள சாமானியன் ஒருவர், இத்தனை நாட்களாக எங்கே போனீங்க, உங்களுக்கு ஒட்டு போட்ட எங்களுக்கு, கடந்த 5 வருடமா என்ன செஞ்சு கிழிச்சீங்க என 5 வருடமாக தொகுதி பக்கமே வராமல் இருந்த கார்த்திக் சிதம்பரத்தை நேருக்கு நேராக அத்தனை பொதுமக்கள் மத்தியிலும் கிழித்து கேப்பையை நட்டார் அந்த சாமானிய வாக்காளர்.

அப்போது பிரச்சார வாகனத்தில் கார்த்தி சிதம்பரம் அருகில் இருந்த நபர், மைக்கை பிடித்து என்னய்யா விவகாரம் செய்யிறியா, போயா அந்த பக்கம் என கேள்வி கேட்ட வாக்காளரை உதாசீன படுத்தும் வகையில் பேசியவர் தொடர்ந்து ,கேள்வி கேட்டவரிடம் பத்து வருசமாக ஆட்சியில் இருந்தவனிடம் கேள்வி கேட்காமல் இப்ப என்னயா கேள்வி கேட்கிற என ஒருமையில் வாக்காளரை மிரட்டும் தோரணையில் மைக்கில் கார்த்திக் சிதம்பரம் அருகில் இருந்தவர் தெனாவட்டாக பேசினார்.

மேலும் நீ யாருய்யா கேள்வி கேட்க, திமுகவா.? காங்கிரசா.? என கேட்க, நான் எம்பியிடம் கேள்வி கேட்கிறேன், ஒட்டு போடுற மக்கள் எம்பிய கேள்வி கேட்க கூடாத என அந்த வாக்காளர் எதிர் கேள்வி கேட்க பிரச்சாரத்தில் ஈடுபட்ட கார்த்திக் சிதம்பரம் மற்றும் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர்கள் பதில் சொல்ல முடியாமல் பிரச்சாரம் செய்த இடத்தில் சலசலப்பு ஆன வீடியோ இதோ…