ஹைதெராபாத் அணியின் கேப்டனாகும் ரோகித் சர்மா… மும்பை அணிக்கு குட் பை..

0
Follow on Google News

இந்தியாவின் தற்போது பதினேழாவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் ஒவ்வொரு அணிகளும் அபாரமாக விளையாடி வருகின்றன. நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் உள்ள பிரச்சனை பரவலாக பேசப்பட்டு வருகிறது.குறிப்பாக, மும்பை அணி நிர்வாகம் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை பறித்து ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் மும்பை அணி வீரர்களிடையே குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும், ஹர்திக் பாண்டியா மன உளைச்சலில் இருப்பதாகவும் பலவிதமாக செய்திகள் பரவி வந்தன. இப்படியான சூழலில், ரோகித் சர்மாவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கொண்டுவர காவியா மாறன் அதிரடியான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரோஹித் சர்மா, அந்த அணியின் கேப்டனாக இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இருப்பினும் கடந்த மூன்று வருடங்களாகவே மும்பை அணி கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வந்தது. இதனால் அப்செட் ஆன மும்பை அணி நிர்வாகம் 2024 ஐ பி எல் தொடரில் அணியின் கேப்டனை மாற்ற முடிவு செய்தது.

அதன்படி, இரண்டு ஆண்டுகளாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு ஒருமுறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு கேப்டனாக நியமித்து அழகு பார்த்தது மும்பை அணி நிர்வாகம். ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பறிக்கப்பட்டதால் அவரும் அவரது ரசிகர்களும் அதிருப்தி அடைந்தனர். அதே சமயம், மும்பை அணி களமிறங்கும் போட்டிகளில் எல்லாம் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வந்தனர்.

அதற்கேற்ப, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி இதுவரை களம் இறங்கிய மூன்று போட்டிகளிலும் தொடர் தோல்விகளை தழுவியது. இதனால் ஒட்டுமொத்த இணையவாசிகளும் பாண்டியாவுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தனர். இவ்வாறு நடக்கும் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆரம்பத்திலிருந்து ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறது மும்பை அணி.

இந்த குளறுபடிகளுக்கு மத்தியில் மற்ற ஐபிஎல் அணிகள் ரோகித் சர்மாவை தங்களது அணிக்கு அழைத்து வர தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. எவ்வாறாயினும், மும்பை அணியுடன் ஆன ஒப்பந்தத்தின்படி 2024 ஐ பி எல் முடிந்த பின்னரே அவர் அந்த அணியை விட்டு விலக முடியும். இந்த ஐபிஎல் முடிந்தவுடன் வெகுவிரைவில் 2025 ஐ பி எல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறும்.

அப்போது ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டுமே தங்கள் அணியில் தக்க வைக்கலாம். ஆனால் மும்பை அணி ரோஹித் சர்மாவை தக்க வைக்காது என்று சொல்லப்படுகிறது. அப்படியே மும்பை அணி ஒப்புக்கொண்டாலும் ரோகித் சர்மா அதர் கோப்பு கொள்ள மாட்டார் என்றும் பேசப்படுகிறது. அது மட்டுமில்லாமல், 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாகவே ரோகித் சர்மாவை ஹைதராபாத் அணிக்கு கொண்டுவர காவியா மாறன் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.