திமுக தோல்வி உறுதி… வெளியான சர்வே ரிப்போர்ட்… இதை மட்டும் எடப்பாடி செய்யதால் போதும்…

0
Follow on Google News

அதிமுக பாஜக கூட்டணி ஜெல் ஆகவில்லை என்று பரவலான விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் யாத்திரை மூலம் அதிமுக பாஜக இடையிலான ஒரு இணக்கமான ஒரு சூழல் உருவாகி வருகிறது, இதற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிச்சாமியின் யாத்திரையில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டது, அதே நேரத்தில் தற்பொழுது பாஜகவையும் கௌரவப்படுத்தும் வகையில் இந்த யாத்திரையில் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார்.

அந்த வகையில் தேர்தலுக்கு சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பே இடம் அதிமுக பாஜக கூட்டணியை அமித்ஷா உறுதி செய்ததற்கு நல்ல பலன் கிடைக்க தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் வரும் தேர்தலில் அதிமுக வாக்குகள் முழுமையாக பாஜகவுக்கும், பாஜக வாக்குகள் அதிமுகவுக்கு முழுமையாக வருவதற்கான வேலையை அதிமுக பாஜக இரண்டு தலைவர்களும் செய்ய வேண்டும்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் டிடிவி தினகரனுக்கு 15 சீட்டு கொடுத்தால் போதும் அவரை இந்த கூட்டணிக்குள் கொண்டு வாருங்கள் என்று அமித்ஷா எவ்வளவோ எடப்பாடி பழனிச்சாமிடம் எடுத்து சொல்லியும், அதை எடப்பாடி பழனிச்சாமி கேட்கவில்லை. அதன் விளைவு 26 தொகுதிகளில் அதிமுக – திமுகவுக்கு இடையிலான வெற்றி வித்தியாசம் வெறும் 2000 வாக்குகளுக்கு குறைவாக இருந்தது.

ஆனால் அதே தொகுதியில் டிடிவி தினகரன் 5000 முதல் 20 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார்கள், அந்த வகையில் அப்போது டிடிவி தினகரனை அமித்ஷா சொன்னது போன்று கூட்டணிக்குள் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்திருந்தால், அதிமுகவுக்கு கூடுதலாக 26 தொகுதிகள் வெற்றி பெற்றிருக்கும், அப்படி ஒரு சூழல் ஏற்பட்டிருந்தால் திமுக மொத்தமே 110 தொகுதிகளில் தான் வெற்றி பெற்று இருக்கும், அதிமுக சுமார் 105 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்

இப்படி ஒரு சூழலில் டெல்லி துணையுடன் நிச்சயம் அதிமுக மீண்டும் 2021 சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவின் கோரிக்கையை நிராகரித்ததின் விளைவு தான் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க காரணமாக இருந்தது, இந்த நிலையில் கடந்த காலங்களில் அமித்சாவின் ஆலோசனையை கேட்காததால் வந்த விளைவுகளை நன்கு உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, தற்போது அமித்ஷா ஆலோசனைப்படியே கூட்டணி விசயத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் காட்பாடி தொகுதியில் சமீபத்தில் வெளியான சர்வே ரிப்போர்ட் ஒரு சதவீதம் அமைச்சர் துரைமுருகன் பின்னணியில் இருப்பதாக வெளியாகிறது, அதே நேரத்தில் திருவண்ணாமலை தொகுதியில் ஏவ வேலு ரெண்டு சதவீதம் தான் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இதுபோன்ற அமைச்சர்கள் இருக்கும் தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு தள்ளிவிடாமல் அதிமுக நேரடியாக துணிந்து களமாட வேண்டும்.

அதே நேரத்தில் பாஜக சுமார் 40 முதல் 50 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கூறப்படுகிறது, குறிப்பாக வட மாவட்டங்கள் சென்னை கொங்கு இந்த மூன்று பகுதிகளில் கொங்கு பகுதியில் அதிமுக மெஜாரிட்டியாகவும் சென்னை வட மாவட்ட பகுதிகளில் திமுக மெஜாரிட்டியாகவும் சமநிலையில் இருக்கும் என்று சர்வே ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் தென் மாவட்டமும் டெல்டா பகுதியும் மட்டுமே யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார் என்பதை உறுதி செய்யும் வகையில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் யார் அதிக வெற்றியை பெறுகிறார்களோ அவர்கள் தான் ஆட்சியை பெறுவார்கள் என்கிறது சர்வே ரிப்போர்ட், இதற்கு டி டி வி தினகரன், ஓபிஎஸ் போன்றோர்களை கூட்டணிக்குள் விரைவில் எடப்பாடி கொண்டு வரவேண்டும் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.