முதல்வர் வெச்ச கோரிக்கை…. தூக்கி எறிந்த துரைமுருகன்… திமுகவின் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்…

0
Follow on Google News

திமுகவில் தலைவர் பதவிக்கு அடுத்து உள்ள மிக முக்கியமான பொறுப்பு பொதுச் செயலாளர் பொறுப்பு, இந்த பொறுப்பை மறைந்த பேராசிரியர் அன்பழகன் தன்னுடைய இறுதி காலம் வரை வகித்து வந்தார், அவருடைய மறைவுக்கு பின்பு திமுகவின் பொதுச் செயலாளர் பொறுப்பு திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகன் கைக்கு வந்தது.

இந்நிலையில் திமுகவில் மற்ற மூத்த அமைச்சர்களான கே என் நேரு, ஐ பெரிய சாமி போன்றோர்களை எல்லாம் ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கும் முதல்வர் முக ஸ்டாலின், திமுகவில் பழுத்த அரசியல்வாதியான துரைமுருகனை மட்டும் கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் பல நேரங்களில், பல சூழலில் சுதந்திரமாக முடிவு எடுக்க முடியாத சூழலுக்கு முதல்வருக்கு முட்டுக்கட்டையாக துரைமுருகன் இருப்பதாக கூறப்படுகிறது.

இருந்தும் முடிந்தளவு துரைமுருகன் அதிகாரத்தை குறைத்து, மெல்ல மெல்ல ஓரம் கட்டும் வேலைகளை திமுக முதல் குடும்பம் செய்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து துரைமுருகன் மீது கடும் அதிருப்தியில் இருந்த வந்த முதல் குடும்பம் , 2021ல் திமுக ஆட்சி அமைந்ததும் முழுமையான பொதுப்பணித் துறையை துரைமுருகனிடம் கொடுக்காமல், அதனை இரண்டாக உடைத்து நீர்வளத்துறையையும் கூடுதலாக கனிம வளத்துறையையும் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

குறிப்பாக கனிம வளத்துறையை அடம் பிடித்து வாங்கிய துரைமுருகன், அமைச்சரான பின்பு பல்வேறு வகையில் தன்னுடைய இருப்பை தக்க வைத்து கொள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கட்சியில் தன்னுடைய செயல்பாடுகளை மாற்றி கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்ட போது, இரண்டு துணை முதல்வர் இருக்க வேண்டும் அதில் ஒன்று எனக்கு தரவேண்டும் என துரைமுருகன் முதல் குடும்பத்துக்கு நெருக்கடி கொடுக்க,

அதெயெல்லாம் சமாளித்து தான் துணை முதல்வராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். இதனை தொடர்ந்து துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்ட நீர்வளம் மற்றும் கனிம வளத்துறையிலும் ஏகப்பட்ட புகார்கள் வந்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை ரெய்டு வரைக்கும் சென்று, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டு திமுக ஆட்சிக்கு கடும் நெருக்கடி தரப்பட்டது.

ஏற்கனவே துரைமுருகன் மீது கோபத்தில் இருந்த முதல்வர் முக ஸ்டாலின் இது தான் சரியான வாய்ப்பு என துரைமுருகன் கைவசம் இருந்து கனிமவள துறையை பறித்து ரகுபதியிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து தற்பொழுது திமுக பொதுச் செயலாளர் பதவியை பறித்து, முற்றிலும் துரைமுருகனை அரசியலில் இருந்து ஓரம் கட்ட முடிவு செய்துள்ள முதல் குடும்பம், பல முறை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய துரைமுருகனிடம் வலியுறுத்தி இருக்கிறது.

ஆனால் பொதுச் செயலாளர் பொறுப்பை விட்டு கொடுக்க மாட்டேன் என பிடிவாதம் பிடித்து வருகிறார் துரைமுருகன் என கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த பொதுச் செயலாளராக டி ஆர் பாலு நியமிக்க பட இருக்கிறார், அவர் வகித்து வந்த பொருளாளர் பதவி ஏ வ வேலுவுக்கு செல்ல இருக்கிறது, விரைவில் துரைமுருகன் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் என்கிற செய்தி வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில், பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய துரைமுருகனிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், என்னை யாரும் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட முடியாது’ என்று கோபமாக தெரிவித்தவர், இந்த கட்சிக்காக நான் ஆற்றிய பங்கு என்ன தெரியுமா.? என்னை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினமா செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள். எப்படி இறுதி காலம் வரை பொதுச்செயலாளராக பேராசிரியர் அன்பழகன் இருந்தாரோ, அதே மாதிரி என் உயிர் உள்ளவரை திமுகவின் பொதுச்செயலாளராகவே இருப்பேன் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என தன்னுடைய பதிலை கோபமாக வெளிப்படுத்தி விட்டார் துரைமுருகன் என கூறப்டுகிறது.