அடுத்த 10 நாளில் பதவி ஏற்பு… அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு… டெல்லியில் இருந்து வெளியான பட்டியல்…

0
Follow on Google News

பாஜக தேசியத் தலைவர் அறிவிப்பு இன்னும் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது, பாஜக தேசிய தலைவராக இருக்கும் ஜெபி நட்டாவின் பதவிக்காலம் முடிந்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில், தொடர்ந்து அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் ஆகி வருகிறது. குறிப்பாக rss-க்கும் பாஜகவில் இருக்கும் சில முக்கிய தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சமூக முடிவை எட்டாத நிலையில் ஜேபி நட்டா தேசிய தலைவராக தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில் தேசிய தலைவர் பட்டியலில் பல பெயர்கள் பரிசீலனை உள்ளது என்றும், அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் வரும் வகையில் இம்முறை ஒரு பெண் தேசிய தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார், அதில் ஒரு தமிழகத்தைச் சார்ந்த ஒரு பெண் தேசிய தலைவராக பொறுப்பேற்கிறார் இருக்கிறார் என்கின்ற செய்திகள் குறித்து டெல்லி வட்டாரத்தில் நாம் விசாரித்த போது,

அதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை என்றும், இது திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி என்பதை உறுதிப்படுத்தியது டெல்லி வட்டாரங்கள். அந்த வகையில் தேசிய தலைவராக தமிழ்நாட்டைச் சார்ந்த யாருக்குமே வாய்ப்பில்லை என்றும், அதேபோன்று பெண்களுக்கும் வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்தியது டெல்லி வட்டாரங்கள்.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் பாஜகவின் மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியான நிலையில், இதுவரை குஜராத், மேற்கு வங்கம், உத்தர பிரதேஷ் போன்ற முக்கிய மாநிலங்களில் பாஜகவின் மாநில தலைவர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை, இதுதான் பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கும் தாமதம் என கூறப்படுகிறது. ஆனால் அடுத்த பத்து நாட்களுக்குள் பாஜகவின் தேசிய தலைவர் அறிவிப்பும் வந்துவிடும், அதேபோன்று இன்னும் பாஜகவின் மாநில தலைவர்கள் அறிவிக்கப்படாத உத்தர பிரதேஷ், குஜராத், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் புதிய பாஜக மாநில தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என உறுதிப்படுத்துகிறது டெல்லி வட்டாரங்கள்.

மேலும் இந்த நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் இம்முறை முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ்ஐ சார்ந்து இருக்க வேண்டும் என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருப்பதால், அதுதான் தற்பொழுது பாஜக தேசிய தலைவர் அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட காரணம் எனக் கூறப்படுகிறது. காரணம் தற்பொழுது இருக்கும் தேசிய தலைவரான ஜேபி நாட்டா ஆர்எஸ்எஸ்ஐ இதற்கு முன்பு சாடியது ஆர்எஸ்எஸ்ஐ மிகப்பெரிய கோபத்திற்கு உள்ளாகியது.

அதனால் அடுத்து வரும் தேசிய தலைவர்கள் ஆர்எஸ்எஸ் சார்ந்து இருக்க வேண்டும் , அதில் உபேந்திரா யாதவ் , சிவராஜ் சிங் சவுகான், ராஜ்நாத் சிங் இவர்களின் ஒருவரை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதில் உபேந்திர யாதவுக்கு பாஜக தேசிய தலைவராவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும், காரணம் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் வழக்கறிஞர் குழுவில் ஒருவராக உபேந்திர யாதவ் இருந்துள்ளார்.

மேலும் ஆர் எஸ் எஸ் இல் நீண்ட நாட்கள் பயணித்தவர் என்றும் அதே நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடன் இணக்கமாக இருக்கக்கூடியவர் என்றும் கூறப்படுவதால், உபேந்திர யாதவுக்கு வாய்ப்பு அதிகமா இருக்கிறதா கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழக்கப்படும் என அமித்ஷா ஏற்கனவே உறுதியளித்த நிலையில்,

தற்பொழுது தேசிய தலைவர் மாற்றம் விரைவில் நடக்க இருக்கும் நிலையில் ஜூலை மாத இறுதிக்குள் பாஜகவின் தேசிய நிர்வாக பட்டியல் வெளியாக இருக்கிறது, அந்த பட்டியலில் அண்ணாமலை பெயரும் இடம் பெற்றிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகிறது, அதில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக அண்ணாமலை வருவதற்கான வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகிறது.