200 கோடி மெகா ஊழல் …. கூண்டோடு கம்பி என்ன தயாராகும் திமுக… களத்தில் இறங்கிய நயினார்… ஸ்தாபித்து மதுரை…

0
Follow on Google News

மதுரை மாநகராட்சி மெகா ஊழல் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. சுமார் 200 கோடி அளவில் மிக பெரிய முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்ட்டுள்ளார்கள், மேலும் மதுரை மாநகராட்சி 5 திமுக மண்டல் தலைவர்களும் ராஜினாமா செய்துள்ளார்கள். இந்த நிலையில் வின்ஞான பூர்வமாக மதுரை மாநகராட்சியில் சுமார் 200 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியி இருக்கிறது.

அதே நேரத்தில் திமுக மண்டல் தலைவர் 5 பேரை ராஜினாமா செய்ய வைத்து ஒரு கண் துடைப்பு நாடகத்தை நடத்தி, இந்த 200 கோடி மெகா ஊழலை மூடி மறைக்க திமுக திட்டமிடுவதாக குற்றம் சாட்டியுள்ள திமுக தரப்பு, ஆனால் இந்த விவகாரத்தை சும்மா விடமாட்டோம், என மதுரை மாநகராட்சியில் நடந்த மிக பெரிய முறைகேட்டை கையில் எடுத்துள்ள பாஜக மதுரையில் மிக பெரிய ஆர்பாட்டத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடத்தி முடித்துள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட நிறுவன கட்டிடங்கள், வீடு ஆகியவற்றின் மாநகராட்சி வரி வசூலில் தான் இந்த மெகா முறைகேடு நடந்துள்ளது. அதாவது உதாரணத்துக்கு ஒரு கட்டிடம் மாநகராட்சிக்கு சுமார் 30 முதல் 40 லட்சம் வரி செலுத்த வேண்டும் என்றால், 5 லட்சம் வரி செலுத்தினால் போதும், ஆனால் அதற்கு 5 முதல் 10 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்கிற நடைமுறையில் வரி வசூல் செய்து மிக பெரிய மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி வரி செலுத்துவதால், கட்டிட உரிமையாளருக்கு பாதிக்கு பாதி லாபம் என்பதால், கேட்கும் லஞ்ச தொகையை கொடுத்து முறைகேடாக வரி செலுத்தப்பட்டு வந்திருக்கிறது. இதனால் அரசங்கத்திற்கு பல கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தை எதிர்கட்சிகளான அதிமுக – பாஜக இரண்டும் மிக தீவிரமாக கையில் எடுத்ததை தொடர்ந்து, மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியது, இது வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு மிக பெரிய பின்டையை ஏற்படுத்தும் சூழலை உருவானது.

மேலும் இந்த முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த விவகாரம் திமுக மண்டல் தலைவர்களை நோக்கி திரும்பியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக திமுகவை சேர்ந்த 5 மண்டல் தலைவர்கள் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் மதுரையில் மிக பெரிய முறைகேடு நடந்துள்ள நிலையில், மதுரை கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் இது குறித்து வாய் திறக்காமல் அமைதியாக இருந்து வருவது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள் பாஜகவினர். மேலும் இந்த விவகாரத்தை உடனே சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த மெகா முறைகேடு விவகாரத்தை அடுத்த கட்டத்துக்குக்கு எடுத்து செல்லும் வகையில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மதுரையில் நடந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை கோஷங்கள் மூலமாக பதிவு செய்தனர்.மேலும் இந்த 200 கோடி மெகா முறைகேடு 5 மண்டல் தலைவர் ராஜினாமா உடன் முடி மறைந்து விடாமல், இதில் தொடர்புடைய திமுகவினர் கூண்டோடு சிறைக்கு அனுப்புவோம் என களத்தில் இறங்கியுள்ள பாஜகவின் மதுரையி நடந்த ஆர்ப்பாட்டம் தற்பொழுது அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளது. மேலும் இந்த விவகாரம் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுகவுக்கு எதிராக மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்க படுகிறது.