திமுகவின் மூத்த தலைவரும் திமுக பொதுச்செயலாளர், அமைச்சருமான துரை முருகனை சுற்றி சமீபகாலமாகவே பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வருகிறது. அவர் இதற்கு முன்பு வகித்து வந்த கனிம வளத்துறையில் மணல் கொள்ளை விவகாரம் அவரை சுற்றி சர்ச்சையில் வெடித்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில் அவருடைய கனிமவளத்துறை பறிக்கப்பட்டு சட்டத்துறை கொடுக்கப்பட்டது.
கட்சிக்குள்ளேயும் பல்வேறு சர்ச்சைகள் துரைமுருகனை சுற்றி இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவருடைய சொந்த மாவட்டத்திலும் பக்கத்து மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் இருக்கும் துரைமுருகனுக்கான செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவே கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பக்கத்து மாவட்டத்தில் இருக்கக்கூடிய திமுக மூத்த அமைச்சர்களுக்கும் இவருக்கும் இடையிலான அதிகாரப்போட்டி மிக உச்ச கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து துரைமுருகன் கைவசம் இருக்கும் பொதுச்செயலாளர் பதவியை பறிக்க வேண்டும் என்பதில் நீண்ட காலமாகவே முதல் குடும்பத்தினர் திட்டமிட்டு வந்தார்கள், ஆனால் அதற்கான காரணங்கள் கிடைக்காமல் ஒவ்வொரு முறையும் காலதாமதம் ஆகி வந்தது. அப்படி இருக்கையில் சமீப காலமாக சில விஷயங்களை நிர்வாக ரீதியாக மறந்து விடுகிறார் என்கின்ற ஒரு குற்றச்சாட்டும் துரைமுருகன் மீது இருந்து வருகிறது.
கனிம வள கொள்ளையில் சிக்கி இருக்கும் துரைமுருகனை பாஜக டார்கெட் செய்து நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளது. இதெல்லாம் காரணம் காட்டி இந்த வயதில் இவ்வளவு பிரச்சனை துரைமுருகனுக்கு தேவையா.?அவர் ஓய்வு எடுக்கலாமே என்று முதல் குடும்ப தரப்பிலிருந்து துரைமுருகனிடம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நீங்கள் சுறுசுறுப்புடன் இல்லை என்று முதல் குடும்பத்திடம் இருந்து அமைச்சர் துரைமுருகனுடன் பேசப்பட்ட போது அதற்கு தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
பல நிகழ்ச்சிகளுக்கு பொதுச் செயலாளரான என்னை அழைக்காமலே நிகழ்ச்சி நடக்கிறது இதில் நான் ஆக்டிவாக இல்லை என்று என் மீது குற்றச்சாட்டுகிறீர்களா என்று தன்னுடைய கோபத்தை துரைமுருகன் முதல் குடும்ப தரப்பிலிருந்து பேசியவர்களிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் துரைமுருகனை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தூக்கி விட்டால் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய அவர் சார்ந்த வன்னியர் சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கு திமுக உள்ளாகுமா? என்றும் அறிவாலயத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
குறிப்பாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வட மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு காரணம் கொங்கு மண்டலத்தில் உள்ள கவுண்டர் சமூகம் மற்றும் வட மாவட்டத்தில் உள்ள வன்னியர் சமூகத்தின் வாக்குகள் தான் அதிமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அந்த வகையில் தற்போது துரைமுருகனை பொதுச்செயலாளர் இருந்து பதவியில் தூக்கி விட்டால் அது வட மாவட்டங்களில் திமுகவிற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துமா என்று ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆனால் அதே சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரை திமுக முன்னிலைப்படுத்தும் போது இது ஒரு விஷயமே இல்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. அந்த வகையில் துரைமுருகனை நேரடியாக அவருடைய பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்காமல், அவராகவே தாமாக முன்வந்து தன்னுடைய வயது காரணமாக தான் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று ராஜினமம் செய்ய வைக்கும் வகையில் முதல் குடும்பம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், துரைமுருகன் வகுத்து வந்த பொதுச்செயலாளர் பதவி டி ஆர் பாலுவுக்கும், T.Rபாலு வகித்து வரும் பொருளாளர் பதவி அமைச்சர் ஏவ வேலூர் கைவசமும் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று இந்த மாற்றங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது.

