உடையும் திமுக கூட்டணி…. பாஜகவுடன் ரகசிய பேரம்… திமுகவுக்கு எதிராக கைகோர்த்த திருமா- வைகோ….

0
Follow on Google News

ஒரு பக்கம் பாஜக அதன் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டு கொண்டு வரும் வகையில், மறுப்பக்கம் திமுக கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு, திமுக கூட்டணி சல்லி சல்லியாக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மற்றும் வைகோ இருவரும் திமுகவுக்கு எதிராக பெரும் குடைச்சல் கொடுக்க தொடங்கியுள்ளதை பார்க்க முடிகிறது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் பேசிய பேச்சு திமுக தலைமையை கதி கலங்க செய்துள்ளது. அதில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட போகிறீர்கள் என்று திரும்பத் திரும்ப எங்களை கேட்கிறார்கள். எங்களுக்கு டீ, பன் கொடுத்து இனி ஏமாற்ற முடியாது. ‘ஆறு முதல் எட்டு சீட்டுகள் கொடுத்தோம், அதற்கு மேல் அவர்களுக்கு சீட்டு கொடுக்க மாட்டோம், அதிகபட்சமாக 10 சீட்டுகளுக்கு மேல் தரமாட்டோம்’ என்று மதிப்பீடு செய்திருந்தால், அந்த மதிப்பீட்டை மாற்றிக்கொள்ளுங்கள் என பேசிய திருமாவளவன்.

மேலும், “நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்குத் தகுதியானவர்கள். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. தேர்தல் கணக்கில் சொல்லவில்லை. சமூக மாற்றத்திற்கான அடிப்படை பார்வையில் சொல்கிறேன் என திருமாவளவனின் இந்தப் பேச்சு, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது என்பதை தெளிவாக காட்டுகிறது.

இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் நடந்த மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவுக்கு எதிராக மிக கடுமையாக பேசிய பேச்சு திமுக கூட்டணிக்குள் சலசப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் உதயசூரியன் போட்டியிட்ட மதிமுக எந்த முறை 12 தொகுதிகளில் அதுவும் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என துரை வைக்கோ பேசி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த மதிமுக பொது குழுவில் திமுகவுக்கு சவால் விடும் நோக்கில் பேசிய மதிமுக நிர்வாகிகளின் பேச்சு திமுக தலைமையை கோபம் அடைய செய்துள்ளது. மேலும் பாஜகவுடன் மறைமுகமாக வைகோ பேரம் பேசி வரும் தகவலும் உளவு துறை மூலம் முதல்வர் முக ஸ்டாலின் கவனத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மதிமுகவில் வைகோ மீது அதிருப்தியில் ஆட்களை தூக்கி திமுகவில் இணைய வைக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் வைகோவின் மிரட்டலுக்கு திமுக இனி அடிபணியாது என்கிற பதில் தான் சமீபத்தில் மதிமுகவில் இருக்கும் ஆட்களை திமுகவில் இணைய வைத்தது என கூறப்படுகிறது. பாஜகவிடம் திரைமறைவில் பேசி வரும் வைகோவுக்கு பாஜக ஒரு அஜெண்டா கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பாஜக கூட்டணியில் வைகோ வருவதற்கு விருப்பம் இல்லை என்றாலும் கூட திமுக கூட்டணியை உடைத்து வெளியே வந்து கடந்த 2016 சட்டசபை தேர்தலில் 3வது அணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பது தான் வைகோ வுக்கு பாஜக கொடுத்த அஜெண்டா என கூறப்படுகிறது.

அப்படி மூன்றாவது அணி அமைக்க முடியவில்லை என்றால் பாஜக கூட்டணியில் வைகோ இடம்பெறலாம் என்கிற ஆப்சன் வைகோ வுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே தனக்கு மீண்டும் ராஜசபா சீட் கொடுக்கப்படவில்லை என்கிற கோபம் திமுக மீது வைகோவுக்கு உண்டு, அதே நேரத்தில் பாஜக தரப்பில் இருந்து வைகோவுக்கு ஒரு ராஜசபா சீட் வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திருமாவளவனுக்கு விஜய் தரப்பில் இருந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கிற சலுகை கொடுத்து திருமாவளவன் வருகைக்காக விஜய் காத்திருக்கும் நிலையில் , விஜய் உடன் திரை மறைவில் பேசி வரும் திருமாவளவன் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து திமுக கூட்டணியை உடைத்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளையும் அழைத்து கொண்டு விஜய் உடன் இணையும் திட்டத்தில் திருமாவளவன் இருப்பதாக கூறப்படுகிறது.