கொங்கு மண்டலத்தில் கோவை திருப்பூர் மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமரி நாகர்கோவில் இந்த பகுதிகளில் மட்டும் பாஜகவும் மிக வலுவாக இருந்து வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் பாஜக வளர்ச்சி அடைந்தாலும் கூட வலுவான கட்டமைப்பும் பாஜகவின் கட்டமைப்பும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் கோவை திருப்பூர் கன்னியாகுமரி நாகர்கோவில் இந்த பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான சமூகம் பாஜகவில் அதிகாரம் மிக்க பொறுப்பில் இருந்து வருகிறார்கள், அதனாலேயே அவர்களால் அவர்கள் சார்ந்த பெரும்பான்மையான சமூகத்தை பாஜக உள்ளே கொண்டு வந்து, பாஜகவை வலுவான அடித்தளத்தோடும் கொண்டு வந்து கட்டமைப்பதற்கு காரணமாக உள்ளது.

இதே போன்று பிற மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான சமூகத்தின் முழு ஆதரவுடன் பாஜகவை வலுவான கட்டமைப்பாக உருவாக்குவதற்கும் வேலைகள் தற்பொழுது நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த முருக பக்தர் மாநாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மிகப்பெரிய அளவில் முன்னிலைப்படுத்தியும் புகழ்ந்தும் அங்கே பங்கேற்ற தலைவர்கள் மேடையில் பேசினார்கள். அதே போன்று சமீபத்தில் மதுரை வந்த அமிர்தாவும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி தன்னுடைய உரையை தொடங்கினார்.
அந்த வகையில் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தை ஆன்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பாஜகவுக்குள் கொண்டு வருவதற்கான திட்டம் தான் இது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுக மீது முக்குலத்தோர் சமுதாயம் அதிருப்தியில் இருந்தாலும் பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.
அந்த வகையில் தென்மாவட்டத்தில் முக்குலத்தோர் சமுதாயத்தின் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்வதற்கான திட்டங்களில் ஒன்றாக தான் அதே சமுதாயத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக அமர்த்தியது பாஜக என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மதுரையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் முத்துராமலிங்கத் தேவரை பாஜக தலைவர்கள் முன்னிலைப்படுத்திய வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சமுதாய ரீதியாக பேசும்போது பாஜகவிருக்கும் வாக்கு வங்கி ஐந்திலிருந்து பத்து சதவீதம் மேலும் கூடும் என்றும், இதே போன்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மை சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில், அந்தந்த பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்களை முன்னிலைப்படுத்தவும்.
அந்த பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள் கொண்டாடும் தலைவர்களை கௌரவப்படுத்தும் விதத்தில் பாஜக செயல்பட்டு வருவது வெகுவாக அந்தந்த பெரும்பான்மை சமூகத்தை கவர்ந்திருக்கிறது. அதே நேரத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் வேட்பாளர் தேர்வின் போது அந்தந்த தொகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சமூகத்தைச் சார்ந்த ஒருவரையே வேட்பாளராக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அமித்ஷா ஆர்டர் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது பாஜகவுக்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் கூட தொடர்ந்து முழுமையாக தன்னுடைய வெற்றிக்கு தடையாக இருப்பது வேட்பாளர் தேர்வு மற்றும் கட்சியில் அந்தந்த மாவட்டங்களில் நியமிக்கப்படும் அதிகாரம் மிக்க பொறுப்புகள் தான், அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த பெரும்பான்மை சமூகத்தை தவிர்த்து அதிகாரமிக்க ஒரு பொறுப்புக்கு வேறு ஒருவரை இயக்கும்போதும், அதேபோன்று தேர்தலில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காமல் வேறு ஒருவருக்கு கொடுக்கும்போது அது பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது என்று அமித்ஷா கவனத்திற்கு உளவுத்துறை ரிப்போர்ட் சென்று இருக்கிறது, அதன் அடிப்படையில் அமித்ஷா வரும் 2026 சட்டசபை தேர்தலில் வேட்பாளர் தேர்வின் போது அந்தந்த தொகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சமூகத்தைச் சார்ந்த ஒருவரையே வேட்பாளராக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அமித்ஷா ஆர்டர் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

