தமிழ் திரையுலகையே உச்சக்கட்ட அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது நடிகர் ஸ்ரீகாந்த்தின் கைது. திரை பிரபலங்கள் பார்ட்டிகளில் பங்கேற்பது வழக்கம். ஆனால் அதில் கொக்கைன் போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக பலரும் தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார்கள். இப்போது இந்த கைது அதை உறுதி செய்திருக்கிறது. முக்கியமாக பல நடிகர்கள் இதில் சிக்கலாம் என்றும் தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.
இந்த விவகாரத்தில் பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தன் சகோதரரும், நடிகருமான கிருஷ்ணாவும் ஸ்ரீகாந்த்துடன் சேர்ந்து கொக்கைன் பயன்படுத்தியதாக பிரதீப் கூறியதாக தெரிகிறது. எனவே அவருக்கு காவல் துறையினர் விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பினார்கள். ஆனால் கிருஷ்ணாவோ விசாரணைக்கு வரவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பின்னணி பாடகி சுசித்ரா பல தகவலை இந்த விவகாரம் குறித்து பகிர்ந்துள்ளார், அதில் , திரைத்துறையை பொறுத்தவரை போதைப் பொருட்களை பயன்படுத்தும் எவரும் ரத்த பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஷாருக்கானின் மகனுக்கு கூட ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? என்பது தெரியவில்லை.
மும்பை போன்ற இடங்களில் இருந்து சில கௌரவ வேடங்கள், ஐட்டம் பாடல்களுக்கு நடிக்க வரும் நடிகர்கள் போதைப் பொருள் கலாச்சாரத்தை தமிழ் திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர். மும்பையில் எல்லாம் காலையில் பல் விளக்குவது போல நாங்கள் இதை பயன்படுத்துவோம் என்று சொல்லி அவர்கள் இந்த கலாச்சாரத்தை திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர்.
இதையெல்லாம் நான் ஆதாரங்கள் இல்லாமல் பேசுவதில்லை. நான் ஊடகத்துறையில் பணியாற்றிய போது இது குறித்து செய்திகள் வரும். ஆனால் இதையெல்லாம் வெளியிட முடியாத சூழல் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் யூடியூப், சமூக வலைதளங்கள் இருப்பதால் ஸ்ரீகாந்த் செய்திகள் வேகமாகப் பரவுகின்றன. ஸ்ரீகாந்த் செய்தியை பல தொலைக்காட்சிகள் பரிதாப மியூசிக் உடன் இணைத்து செய்தியாக வெளியிடுகின்றனர்.
திரைத்துறையில் இருக்கும் அனைவரையும் இது போல் நாம் குற்றச்சாட்டி விட முடியுமா என்று கேட்டால் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தான் நம்மால் கூற முடியும். எனக்கும் கொக்கைன் பயன்படுத்துவதற்கு அருகில் வரை வாய்ப்புகள் வந்தது, ஆனால் நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். கலப்பட கொக்கைன் ஒரு கிராம் ரூ.12,000-க்கும், ஒரிஜினல் கொக்கைன் ரூ.65,000 வரை விற்பனையாகிறது.
சென்னையில் உள்ள அனைத்து மதுபான விடுதிகள், பப்களில் இது சாதாரணமாக நடக்கிறது. சென்னையில் இருக்கும் மதுபான விடுதிகளில் கழிவறைக்குச் சென்று பலரும் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். 1 கிராம் கொக்கைன் பயன்படுத்த ஒரு 30 வினாடிகள் போதும். ‘கங்குவா’ படத்தில் கூட ஒரு காட்சியில் சூர்யா அதை சித்தரித்திருப்பார்.
அந்த காலத்தில் இருந்த நடிகைகள் குடிப்பழக்கத்தில் இருந்த தங்களது கணவர்களை மீட்டு எடுத்ததை பார்த்திருப்போம் ஆனால் இந்த காலத்தில் நடிகர்கள் மனைவிகளே ஊற்றிக் கொடுப்பதும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதும் வெள்ளி தட்டுகளில் போதைப்பொருட்களை வைத்து கோலம் வரைந்து கொண்டு வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
நீங்கள் கூகுளில் சென்று கொக்கைன் பயன்படுத்துவதன் பக்க விளைவுகளை தேடிப் பாருங்கள். அந்தப் பக்க விளைவுகளுடன் எந்த நடிகர்களின் தோற்றம் ஒத்துப் போகிறதோ அவர்கள் எல்லாருமே கொக்கைன் பயன்படுத்துகிறார்கள். இதுவரை தான் என்னால் சொல்ல முடியும். இதற்கு மேல் அவர்களின் பெயர்களை எல்லாம் என்னால் சொல்ல முடியாது என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.

