10 ஆண்டுகள் சிறை தண்டனை …. கண் கலங்கிய ஸ்ரீகாந்த்… அடுத்தடுத்து சிக்கும் நடிகர்கள்…

0
Follow on Google News

போதை பொருள் விவகாரத்தில் ஸ்ரீகாந்துக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், பிரசாத் என்பவரிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியது, அவரிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

மேலும் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்க ஜி பே மூலம் பணம் அனுப்பியது உள்ளிட்ட விவரங்கள் ஸ்ரீகாந்த் பயன்படுத்திய செல்போன் மூலம் அம்பலமானது. இதனை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து போதை பொருள் பயன்படுத்திய எட்டு காலி பாக்கெட்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீகாந்த் யிடம் தொடர்ந்து விசாரணை நடத்த பட்ட பிறகு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் தான் தவறு செய்து விட்டதாக ஒப்புக்கொண்டவர். தன் மகனைப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்கவும் கோரிக்கை விடுத்தார். மேலும் தான் எப்படி இந்த போதை பழக்கத்திற்கு உள்ளானேன் என்கிற தகவலையும் நீதிமன்றத்தில் பகிர்ந்து கொண்டார்.

அதில் தனக்கு கொக்கைன் போதைப் பொருள் பழக்கத்தை ஏற்படுத்தியது அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தான் என்று வாக்குமூலம் அளித்த நடிகர் ஸ்ரீகாந்த், தீங்கரை படத்திற்காக தனக்கு பிரசாத் 10 லட்ச ரூபாய் தர வேண்டியது இருந்ததாகவும், பணம் கேட்டால் அவர் போதைப் பொருள் வழங்கியதாகவும் தெரிவித்த ஸ்ரீகாந்த், இரண்டு முறை அவர் வாங்கிக் கொடுத்த பழக்கப்படுத்திய பிறகு மூன்றாவது முறை தானே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொகைன் வாங்கி தந்த பிரசாத், தன்னை அடிமைப்படுத்தியதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ள நிலையில், மூன்று நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த நடிகர்கள் யார் யார்? சினிமா பார்ட்டிகளில் போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க இருக்கின்றனர். இதற்காக ஸ்ரீகாந்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தையும் நாட உள்ளனர்.

இதற்கிடையே போதை பொருள் விவகாரத்தில் மேலும் சில நடிகர் நடிகைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதில் இன்னொரு நடிகருக்கும் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அந்த இன்னொரு நடிகரான கிருஷ்ணா தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்நிலையில் போதைப் பொருள் விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். பொதுவாக போதைப்பொருள் வழக்கில் கைதானால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்று நிலையில் நடிகர் ஸ்ரீகாந்திற்கும் 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  

அதே நேரத்தில் நொங்கை தின்றவன் தப்பித்து விட்டான், அதை நொண்டி திட்டவன் மாட்டி கொண்டான் என்கிற கதை போன்று, சினிமா துறையில் நடக்கும் பார்ட்டிகளில் போதை பொருட்கள் பயன்படுத்த படுகிறது என்கிற குற்றசாட்டுகள் பெருமளவு இருந்து வரும் நிலையில், இதில் தொடர்புடைய பெரும் முதலைகள் தப்பித்து விட்டது ஆனால் பாவம் ஸ்ரீகாந்த் மாட்டி கொண்டார் என பரிதாப படுகிறது சினிமா வட்டாரங்கள்.