அமித்ஷா கையில் உளவு துறை ரிப்போர்ட்… சரிந்தது திமுக சாம்ராஜ்யம்…

0
Follow on Google News

சமீபத்தில் மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடந்த முருக பக்தர் மாநாடு தமிழக அரசியலில் திறப்பு முனையாக அமைந்திருக்கிறது. இந்த மாநாடு குறித்து டெல்லி இருக்கும் காங்கிரஸ் தலைமை ஏதாவது கருத்து தெரிவித்தால், அது இந்துக்களுக்கு எதிராக அமைந்து விடும் என்பதால் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக கடந்து செல்கிறார்கள், ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மதுரை நடந்த முருக பக்தர் மாநாடு குறித்து கருத்து தெரிவித்திருந்தது டெல்லி காங்கிரஸ் தலைமையை கடும் கோவத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் விரைவில் செல்வப் பெருந்தகை காங்கிரஸ் தலைவராக மாற்றப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்ற விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு நெற்றியிலிருந்த விபூதியை அளித்து ஒரு அம்மாவுக்கு செல்ஃபி கொடுத்தார்.

இந்த வீடியோ வைரலாகி இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் திருமாவளனுக்கு எதிராக திரும்பி உள்ளது. குறிப்பாக திருமாவளவனின் இந்த செயல் சிறுபான்மை மக்களை வேண்டுமானால் குளிர்விக்கும் முயற்சிக்கலாம் என்றும் ஆனால் இதனால் இந்துக்கள் ஓட்டு திருமாவளனுக்கு மட்டும் இல்லை திருமாவளவன் அங்க வைக்கும் திமுக கூட்டணிக்குமே மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்றுதான் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் மதுரையில் நடந்த முருக பக்த மாநாடுக்கு பின்பு மத்திய உளவுத்துறை மூலம், முருக பக்தர் மாநாடுக்கு முன்பு முருக மாநாடுக்கு பின்பு என்ன அரசியல் நிலவரம் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிந்து கொண்டதாக தகவல் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அதில் முருகபக்த மாநாடு மிகப்பெரிய அளவில் பாஜகவிற்கு கைகொடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக திமுகவில் இருக்கக்கூடிய இந்துக்களின் வாக்குகளில் சுமார் 5% முதல் 8 சதவீதம் வரை திமுகவிற்கு சரிவை கொடுத்திருக்கிறது. திமுகவுக்கு சரிவை கொடுத்துள்ள இந்த எட்டு சதவீத வாக்குகள் பாஜகவிற்கு மாறுவதுக்கான சாத்திய கூறுகள் உள்ளன என்று உளவுத்துறை ரிப்போர்ட் அமித்ஷாவிடம் தெரிவித்திருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் திமுகவை ஆதரித்து வந்த 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலான இந்துக்களின் வாக்குகள் பாஜக பக்கம் இந்த முருக மாநாட்டில் இருந்து திரும்பியுள்ளதாக அமித்சா கவனத்துக்கு உளவு துறை ரிப்போர்ட் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இதற்கு முன்பு டாஸ்மாக் ஊழலில் திமுக சிக்கியது, செந்தில் பாலாஜிக்கு சிறைக்கு சென்றது, மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சைவ வைணவம் குறித்து பேசியது, அப்போதெல்லாம் இருந்ததைவிட தற்பொழுது முருக பக்தர் மாநாடு மூலம் திமுகவிற்கு இந்துக்கள் வாக்கு மிகப்பெரிய சரிவை கொடுத்து இருக்கிறது என்கின்ற உளவுத்துறை ரிப்போர்ட் அமித்ஷா கவனத்திற்கு சென்றுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிகிறது.

இந்த நிலையில் இந்து முருக பக்தர் மாநாடு தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனை மாநாடாக அமைந்து, அது பாஜகவிற்கு வளர்ச்சியும் திமுகவிற்கு சரிவையும் ஏற்படுத்தி இருக்கின்ற தகவல் முதல்வருக்கு இடியாய் விழுந்த செய்தியாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.