திமுகவில் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் , பொருளாளர் பொறுப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகள். இதில் கருணாநிதி திமுக தலைவராகவும், பேராசிரியர் அன்பழகன் பொதுச் செயலாளராகவும் இருந்த காலகட்டத்தில், கருணாநிதியின் வாரிசுகள் திமுகவில் அடுத்தடுத்து பொறுப்புகளுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை. குறிப்பாக திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மகன் முக ஸ்டாலின் அடுத்தடுத்து திமுகவில் முக்கிய பொறுப்புகள் வகிக்க அப்போது பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன், முக ஸ்டாலின் அரசியலுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டாரே தவிர, தடையாக இல்லை.
அதே நேரத்தில் தலைவராக இருந்த கருணாநிதி அவருடைய வரிசை அரசியலுக்கு கொண்டு வந்தார் என்பதற்காக போட்டியாக தன்னுடைய வாரிசையும் அரசியலுக்கு கொண்டு வருவேன் என அப்போது தலைவராக இருந்த கருணாநிதியிடம் முரண்பட்டு அன்பழகன் நிற்க வில்லை, ஆனால் தற்பொழுது துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அரசியல் வளர்ச்சிக்கு மிக பெரிய முட்டுக்கட்டையாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வருவதற்கு மிக பெரிய அளவில் தடையாக இருந்து இருக்கிறார் துரைமுருகன், இருந்து ஒரு வழியாக துரைமுருகனை சமாதானம் செய்து தான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பு ஏற்று கொண்டார் என கூறப்படுகிறது. மேலும் முதல்வர் முக ஸ்டாலின் அவர் வாரிசான உதயநிதியை அரசியலுக்கு கொண்டு வருவது போன்று தன்னுடைய வாரிசான கதிர் ஆனந்துக்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என முதல் குடும்பத்துக்கு போட்டியாகவே அரசியல் காய்களை துரைமுருகன் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் மதுரையில் திமுக பொது குழு கூடியது, அதில் இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி துணை பொதுச் செயலாளர் பொறுப்பை எதிர் பார்த்து கொண்டு இருந்திருக்கிறார், ஆனால் அதற்கு மூத்த தலைவர்கள் மத்தியில் குறிப்பாக அமைச்சர் துரைமுருகன் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதாகவும், அதனால் உதயநிதிக்கு துணை பொதுச் செயலாளர் பொறுப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் துரைமுருகன் நடவடிக்கைகள் முதல் குடும்பத்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் 86 வயதாகும் துரைமுருகன் வயதை காரணம் காட்டி ஓரம் கட்ட முடிவு செய்துள்ளது முதல் குடும்பம் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.ஏற்கனவே செல்வம் செழிக்கும் கனிம வள துறையை பிடுங்கி, சட்ட துறையை கொடுத்து அமைச்சரவையில் டம்மியாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளார் துரைமுருகன்.
மேலும் துரைமுருகனை டம்மிப் செய்யும் நோக்கில் அவருடைய பொதுச் செயலாளர் பதவியை பறிக்க திமுக முதல் குடும்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்பொழுது பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகன் அவருடைய பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகி கொள்ள வேண்டும் என்றும், அதற்கான ராஜினமா கடிதத்தை தலைமையிடம் கொடுக்க வேண்டும் என துறை முருகனிடம் முதல் குடும்பம் தரப்பில் இருந்து வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் துரை முருகன் வகித்து வரும் பொதுச் செயலாளர் பதவி அடுத்து அமைச்சர் ஏ வ வேலு, அல்லது திமுக எம்பி டி ஆர் பாலு ஆகிய இருவரில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அப்படி பொதுச் செயலாளர் மாற்றத்தின் போது தற்பொழுது இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்புக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

