கனிமொழி பின்னணியில் பாஜக… இறங்கி வந்த முக ஸ்டாலின்…திமுகவில் பொதுச் செயலாளர் பதவி…

0
Follow on Google News

திமுக துணை பொதுச்செயலாளராக இருக்கும் கனிமொழிக்கு சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு முதல்வர் மு க ஸ்டாலின் கனிமொழியை இருக்கையில் அமர வைத்த நிகழ்வு அரங்கேறியது. பொதுவாகவே திமுகவின் துணை பொதுச்செயலாளராக ஆ ராசா, திருச்சி சிவா, கனிமொழி உட்பட நான்கு நபர்கள் உள்ளனர், இவர்களுக்கெல்லாம் இல்லாத முக்கியத்துவம் கனிமொழிக்கு ஏன் கொடுக்கப்படுகிறது.

குறிப்பாக துணை பொதுச்செயலாளருக்கு அண்ணா அறிவாலயத்தில் தனி அறை ஒதுக்கப்பட வேண்டிய அவசியம் என்ன.? என்கின்ற பரபரப்பு நீடித்து வருகிறது. பொதுவாகவே திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர், திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் என உயர் பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமே தனி அறைகள் ஒதுக்கப்படும்.

ஆனால் கருணாநிதி மறைவுக்குப் பின்பு முதல்வர் மு க ஸ்டாலினின் குடும்பம் உதயநிதி ஸ்டாலினை அரசியலில் முன்னிறுத்த கனிமொழியை ஓரங்கட்டப்பட்ட வந்த நிலையில், திடீரென்று கனிமொழிக்கு தனி அறையை அண்ணா அறிவாலயத்தில் ஒதுக்கி கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் பின்னணி என்ன என்கின்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது கனிமொழி பாஜக டெல்லி தலைமையிடம் மிக நெருக்கமாக நட்பில் இருக்கிறார் என்கின்ற தகவல் பரவலாகவே பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய அமைச்சர்களான நிதின் கட்காரி மற்றும் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் மிக நெருங்கிய நட்பில் கனிமொழி இருந்து வருவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. கனிமொழிக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதற்கு பாஜக தயாராகவே இருக்கிறது என்று கூறப்படுகிறது.

குறிப்பாக திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் இடையில் நடக்கும் அதிகார போட்டியில் கனிமொழி ஓரம் கட்டப்பட்டு வந்த நிலையில் கனிமொழிக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு பாஜக தலைமை தயாராக இருந்து வருகிறது. சமீபத்தில் திமுக திமுக எம்பி கனிமொழி தலைமையில் வெளிநாட்டிற்கு ஒரு குழு ஒன்றை அனுப்பி கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தது பாஜக.

இப்படி ஒரு சூழலில் திமுகவிற்கு பிளவு ஏற்பட்டால்,கனிமொழிக்கு ஆதரவாக பாஜக இருக்கும். இந்த நிலையில் பாஜகவுடன் கனிமொழி நெருக்கமாக இருக்கும் தொடர்பை அறிந்து கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின், இதற்கு மேல் கனிமொழியை ஓரங்கட்டும் முயற்சியில் ஈடுபட்டால் அது மிகப் பெரிய விபரீதத்தை ஏற்படுத்தி விடும் என, சமீபகாலமாகவே கட்சிக்குள் கனிமொழிக்கு முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறார் முதல்வர்.

இந்த நிலையில் பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகன் மாற்றப்பட இருக்கும் நிலையில், கனிமொழிக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுமா என்று பரபரப்பு நீடித்து வந்தது, ஆனால் அவருக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. டி ஆர் பாலு பொதுச்செயலாளராகவும் ஏவா வேலு பொருளாளர் ஆகவும் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் கனிமொழி ஆதரவாளர்கள் குறைந்தது 20 நபர்களுக்காகவது போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து நிச்சயம் தன்னுடைய ஆதரவாளருக்கு சீட்டு வாங்கி கொடுப்பார் கனிமொழி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கனிமொழி பின்னணியிலிருந்து பாஜக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டே முதல் குடும்பம் சமீப காலமாக கனிமொழியிடம் அடக்கி வாசிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.