பிடிவாதம் பிடிக்கும் துரைமுருகன்…. முக ஸ்டாலின் சமரச முயற்சி தோல்வி… உச்சக்கட்டத்தில் திமுக உட்கட்சி பூசல்…

0
Follow on Google News

கடந்த சில மாதங்களாகவே முதல் குடும்பத்துக்கும் – திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் இடையில் இருந்து வந்த உரசல் உச்சகட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் ,துணை முதல்வர், அக்கட்சியில் உயர் பதவி என என்ன பொறுப்பு கொடுத்தாலும், மற்ற திமுக தலைவர்கள் எல்லாம் தலையை ஆட்டி கொண்டு வரவேற்று கொண்டிருக்கையில், உதயநிதியின் அரசியல் வளர்ச்சிக்கு மிக பெரிய முட்டு கட்டையாக இருந்து வருகிறார் திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் என கூறப்படுகிறது.

மேலும் சில காரணங்களால் துரைமுருகன் மீது கடும் அதிருப்தியில் இருந்து வரும் முதல்வர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்முடி மீது நடவடிக்கை எடுத்த கடிதம் பொதுச் செயலாளர் துரைமுருகன் பெயரில் வெளியாவதற்கு பதில் நேரடியாக முதல்வர் பெயரில் வெளியானது, அப்போதே துரைமுருகன் திமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார் என பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து துரைமுருகன் கைவசம் இருந்த கனிமவள துறை பறிக்கப்பட்டு அமைச்சர் ரகுபதியிடம் கொடுக்கப்பட்டது, இப்படி படி படியாக அமைச்சர் துரைமுருகன் திமுகவில் இருந்து ஓரம் கட்ட பட்டு வந்த நிலையில், தற்போது அவரின் கைவசம் இருக்கும் பொதுச் செயலாளர் பதவியையும் பறிக்கும் நடவடிக்கைகளில் முதல் குடும்பம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

துரைமுருகன் கைவசம் இருக்கும் பொதுச் செயலாளர் பதவியை பறித்து TR பாலுவுக்கும், TR பாலுவிடம் இருக்கும் பொருளாளர் பதவி எவ வேலுவிடம் கொடுக்க முதல்வர் முக ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுவில் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும் என முதல் குடும்பம் முடிவு செய்ததாகவும், ஆனால் துறை முருகன் விட்டு கொடுக்காததால் பொதுச் செயலாளருக்கான மாற்றம் நிகழவில்லை என கூறப்படுகிறது.

மூத்த தலைவர் என்கிற முறையில் துரைமுருகன் அவராக முன் வந்து அவருடைய பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும், கட்சி தலைமை அவரை நீக்கி விட்டு வேறு ஒருவரை பொதுச் செயலாளராக நியமித்தால் அது சரியாக இருக்காது என்பதால் தொடர்ந்து துரைமுருகனை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி முதல் குடும்பம் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது திமுகவில் இருப்பதில் மிக மூத்த தலைவராக இருந்து வருகின்றவர் துரைமுருகன், அதாவது கருணாநிதி, அன்பழகன், வரிசையில் அடுத்து இருந்தவர் துரைமுருகன், அந்த வகையில் தற்பொழுது துரைமுருகனை சமாதானம் செய்து பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைக்க நேரடியாக துரைமுருகனை சந்தித்து முதல்வர் சமாதான முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கட்சியில் அனுபவத்தில் மூத்தவர் நீங்கள், உங்களுக்கு வயது மூப்பு காரணமாக நீங்கள் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம், நீங்கள் ஓய்வில் இருந்து எங்களை வழிநடத்த வேண்டும் என்று துரைமுருகனிடம் முதல்வர் பேசிய சமரச பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், அந்த வகையில் முதல்வரின் சமரச பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது.

அதாவது பொதுச் செயலாளர் பதவியை விட்டு கொடுக்க மாட்டேன் என விடா பிடியாக துரைமுருகன் இருந்து வருவதால், அடுத்ததாக துரை முருகன் மகன் கதிர் ஆனந்திடம் பேசி அப்பாவிடம் எடுத்து சொல்லுங்கள், உங்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் தருகிறோம் என்று முதல் முதல்வர் தரப்பில் பேச இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் திமுக மூத்த தலைவர் பொன்முடியை ஓரம் கட்டியது போன்று துரைமுருகனை ஓரம் கட்ட முடிவு செய்து விட்டது முதல் குடும்பம் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.