மதுபானங்கள் மட்டுமின்றி கஞ்சா பிரவுன் சுகர் கொகைன் போன்ற ராஜ போதை தரும் வஸ்துகளையும் பாலிவுட்டில் உள்ள நட்சத்திரங்கள் பயன்படுத்துபவர்கள்தான் அதிகம். ஆனால் இது தற்போது கோலிவுட்டிலும் பரவி இருப்பது நடிகர் ஸ்ரீகாந்த் வாயிலாக வெளிச்சத்துக்கு இப்போது வந்து விட்டது.
ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இயக்குனர் சசி இயக்கிய ரோஜா கூட்டம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் பல வெற்றி படங்களில் நடித்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகர் ஸ்ரீகாந்த், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சினிமாவில் தனக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் குடும்பத்திலும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீகாந்த்தின் நடவடிக்கைகளால் அவரது மனைவி வந்தனாவுக்கும் அவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி வந்தனா, ஸ்ரீ காந்துடன் இருக்காமல் அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.பல மாதங்களாக ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா, அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
இதனால் மனைவியை விட்டுச் சென்ற பிரிவால் ஏற்பட்ட மன அழுத்தத்தை மறக்கவும், மன உளைச்சலை போக்கவும் பல உல்லாச பார்ட்டிகளுக்கு சென்றதாகவும், அப்போதுதான் மன அழுத்தத்தை போக்க போதைப் பொருள் பழக்கம் ஏற்பட்டதாகவும் நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரிடம் விசாரணையில் வாக்குமூலமாக கூறியிருக்கிறார்.
மேலும் கொகைன் பயன்படுத்திய தனது தனிப்பட்ட பழக்கம் தான் என்றும் நான் போதைப் பொருட்களை யாருக்கும் விற்பனை செய்யவில்லை என்றும் நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் தொழில் ரீதியான நெருக்கடிகள் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அதனால்தான் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாகவும் ஸ்ரீகாந்த் போலீசாரிடம் கூறியிருக்கிறார்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் மன அழுத்தம் இருந்ததால், அதில் இருந்து ரிலாக்ஸ் ஆகவே போதைப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கியதாகவும் அதை தனது சொந்த உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்தியதாகவும், யாருக்கும் அதை விற்பனை செய்யவில்லை என்றும் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த், தற்போது புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில்கேரளாவில் இருந்த நடிகர் கிருஷ்ணாவை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்திய நிலையில், தனக்கு இரைப்பையில் பிரச்னை உள்ளது. இதயத்துடிப்பு வேகமாக இருக்கிறது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறேன். நான் போதை பொருட்களை பயன்படுத்தவில்லை என்று போலீசாரிடம் கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் அவரிடம் மேற்கெொண்ட மருத்துவ சோதனையில் அவர் போதை பொருட்கள் பயன்படுத்தவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்க, பார்ட்டிகளில் கலந்துக்கெொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் பெண்களுடன் போதையில் கொண்டாட்டம் போட்டிருப்பதும் போலீசார் விசாரணையில் உறுதியாகி உள்ளது.

