ஓவர் அட்ராசிட்டி செய்த சூர்யா… டென்சனின் சூர்யாவை வெளியேற்றிய வெற்றிமாறன்.. ட்ரோப் ஆனது வாடிவாசல்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். வெற்றிமாறனைப் பொறுத்தவரை அவர் கதையின் மட்டுமே முழு அளவில் கவனம் செலுத்துவார். அவரது கதைக்கு தான் கதாபாத்திரங்கள் தேவையே தவிர, படத்தில் நடிக்கும் ஹீரோக்களுக்காக தனது கதையில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாத ஒரு படைப்பாளியாக வெற்றிமாறன் இருந்து வருகிறார்.

அதனால் வெற்றிமாறனை பொறுத்தவரை அவரது படைப்பில் கதையும் கதைக்களமும் கேரக்டர்களும் பேசுமே தவிர ஹீரோக்கள் குறித்த முக்கியத்துவத்தை அவர் எப்போதுமே கவனத்தில் கொள்ள மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.

வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவும் முடிவானது. அப்போதே நடிகர் சூர்யாவுக்கும் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் ஒரு பெரும் தொகையை தயாரிப்பாளர் தாணு அட்வான்ஸ் ஆக கொடுத்தும் விட்டார். ஆனால் ஏற்கனவே நடிகர் சூர்யா ஒப்புக்கொண்ட படங்கள் கைவசம் இருந்ததாலும், இயக்குனர் வெற்றிமாறனுக்கும் விடுதலை விடுதலை 2 படங்கள் கைவசம் இருந்ததாலும் அவர்களால் உடனடியாக வாடிவாசல் படத்தை தொடங்க முடியவில்லை.

இந்நிலையில் வெற்றிமாறனின் விடுதலை விடுதலை 2 படங்கள் வெளியான நிலையில், சூர்யா கைவசம் இருந்த படங்களும் முடிந்த நிலையில் இருவரும் வாடிவாசல் படத்திற்காக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக வாடிவாசல் படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

ஏனென்றால் நடிகர் சூர்யாவுக்கு கடந்த 10 ஆண்டுகளாகவே பெரிய அளவில் வெற்றி படங்கள் இல்லை. இந்த நேரத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்கப் போவதில்லை, அதே போல் வெற்றிமாறனும் வாடிவாசல் படத்தை இயக்கப் போவதில்லை என்பது இப்போது உறுதியாகிவிட்டது. இதற்கான காரணங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அதாவது நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்க 5 ஆண்டுகளுக்கு முன் ஒப்புக்கொண்ட போது அவரது சம்பளம் 30 கோடி ரூபாய். ஆனால் இப்போது அவரது சம்பளம் 65 கோடி ரூபாய். அதனால் வாடிவாசல் படத்தை ஒரே படமாக மட்டுமே தர வேண்டும். 2ம் பாகமாக நீங்கள் இயக்கக் கூடாது. அப்படி இயக்கினால் நான் தயாரிப்பாளர் தாணுவிடம் 2ம் பாகத்தில் நடிக்க தனியாக சம்பளம் கேட்க முடியாது என்று நடிகர் சூர்யா கூறியிருக்கிறார்.

அத்துடன் 2 ஆண்டுகள் வேண்டுமானாலும் உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன். ஆனால் எனக்கு வாடிவாசல் படத்தை எப்போது ஆரம்பித்து, எப்போது முடிப்பீர்கள் என்பதை நீங்கள் அக்ரிமெண்டில் குறிப்பிட்டு எழுதி தர வேண்டும் என்றும் நடிகர் சூர்யா கேட்டிருக்கிறார். இதனால் வெற்றிமாறன் அப்செட் ஆகியிருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறனை பொறுத்தவரை ஒரு படம் ஒரு பாகமாக, இரண்டு பாகமா என்பதை அவரால் முதலில் தீர்மானிக்க முடியாது. ஏனென்றால் அவர் படத்தில் கதையின் போக்கு செல்ல செல்ல அதற்கேற்ப ஒரே பாகமோ 2ம் பாகமோ 3ம் பாகமோ என அவர் முடிவு செய்யலாம்.

மேலும் படப்பிடிப்பை எப்போது துவங்குவது எப்போது முடிப்பது என்பது அவரது கையில் இல்லை. ஏனென்றால் வெற்றிமாறனின் டைரக்சன் ஸ்டைல் அப்படிப்பட்டது. .அதனால் அவரால் எதையும் உறுதியாக கூற முடியவில்லை. வாடிவாசல் படத்தின் பவுண்டரி ஸ்கிரிப்ட் எனப்படும் முழுக் கதையையும் முன்பே தன்னிடம் தர வேண்டும் என்றும் சூர்யா கேட்டிருக்கிறார்.

ஆனால் 60 சதவீதம் கதை மட்டுமே உருவாகிய நிலையில் மீதிக்கதை ரெடியாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார். இப்படி பல்வேறு கண்டிஷன்களை நடிகர் சூர்யா போட்டிருக்கிறார். இப்படி அடுக்கடுக்காய் கண்டிசன் போடும் சூர்யாவுடன் நம்மால் பணியாற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்த இயக்குனர் வெற்றிமாறன், வாடிவாசல் பாடத்தையே டிராப் செய்து விட்டார் என்பதுதான் நடந்த உண்மை.