டாஸ்மாக் ஊழலில் தப்பிய உதயநிதி… டெல்லியில் பேசிய கனிமொழி… 37,000 கோடி ஊழலில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்…

0
Follow on Google News

அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனங்களில் நடத்திய அதிரடி சோதனைக்கு பின்பு சுமார் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டாஸ்மாக் மூலம் சுமார் 37 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்று பகிரங்கமாக மேடையில் பேசியிருந்தார். இப்படி மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த டாஸ்மாக் ஊழல் தொடர்பான விசாரணை அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் தற்பொழுது நின்றுள்ளது.

இதற்கு பின்னணியில் டெல்லியில் நடந்த நிகழ்வு தான் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டாஸ்மாக் ஊழல் தொடர்பான விசாரணை உச்ச கட்டத்தில் இருந்தபோது, எந்த நேரமும் அமலாக்கத்துறை உதயநிதி ஸ்டாலினை நெருங்கலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது, அந்த வகையில் சிந்துர் ஆபரேஷன் தொடர்பாக கனிமொழி தலைமையில் ஒரு குழு வெளிநாடு செல்வதற்கு முன்பு மத்திய அமைச்சரை கனிமொழி நேரடியாக சந்தித்து பேசியது, டாஸ்மாக் விவகாரத்தில் உதயநிதியை காப்பாற்ற தான் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அதாவது பாஜகவில் கனிமொழிக்கு என மிகப் பெரிய லாபி உள்ளது, பாஜகவில் முக்கிய அமைச்சர்கள் பெரும்பாலானருடன் கனிமொழி மிக நெருங்கிய நட்புடன் இருக்கிறார். அந்த வகையில் முதல்வர் மு க ஸ்டாலின் கனிமொழி மூலமாக உதயநிதியை காப்பாற்ற எடுத்த முயற்சி தான் பாஜகவின் முக்கிய மத்திய அமைச்சரை சந்தித்து கனிமொழி பேசியது என்று கூறப்படுகிறது.

அதாவது உதயநிதியை அமலாக்கத்துறை நெருங்க வேண்டாம், பாஜகவுக்கு தேவையான ஆதரவை மறைமுகமாக திமுக செய்யும், 1998 இல் வாஜ்பாய் ஆட்சியை ஜெயலலிதா 13 நாட்களில் கவிழ்த்தபோது, அன்று திமுக 5 வருடம் பாஜகவை ஆதரித்தது, நீங்கள் எங்களுக்கு கொள்கைக்கு நேர் எதிராக இருந்தாலும் உங்களை நாங்கள் ஆதரித்தோம், என்றெல்லாம் பாஜக மத்திய அமைச்சரிடம் பேசி இருக்கிறார் கனிமொழி.

அதே நேரத்தில் பாஜகவிற்கு எப்படி சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமாரும் நேரடியாக ஆதரவு தருகிறார்களோ, அந்த வகையில் மறைமுகமாக பாஜகவை நாங்கள் எதிர்க்க மாட்டோம் என்றெல்லாம் சமரசம் பேசியிருக்கிறார் கனிமொழி. இதனை தொடர்ந்து தான் பாஜகவும் தற்காலிகமாக டாஸ்மாக் விவகாரத்தை நிறுத்தி வைக்க முன் வந்ததாக கூறப்படுகிறது.

அதன் வெளிப்பாடுதான் உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் தொடர்பாக அமலாக்கத்துறை டாஸ்மாக் ஊழல் தொடர்பாக இனி விசாரணையும் சோதனையும் நடத்தக்கூடாது என்ற போது, அமலாக்கத்துறை தரப்பில் அனைத்து ஆதாரங்களும் இருந்தாலும் அதை முறையாக உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதாவது அதிகாரப்பூர்வமாக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் உள்ளது நடந்துள்ளது என அமலாக்கத்துறை அறிவித்திருந்தது, மேலும் டாஸ்மாக் உயர் அதிகாரி விசாகன் கொடுத்த வாக்குமூலம் மூலம் ரத்தீஷ் , ஆகாஷ் பாஸ்கருக்கு தொடர்பு இருக்கிறது என்கின்ற ஆதாரமும் அமலாக்கத்துறை கைவசம் இருந்தாலும், அதை உச்ச நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்காததால் தான் தற்பொழுது டாஸ்மாக் ஊழல் வாரத்தில் இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் விதித்திருக்கிறது என கூறப்படுகிறது.

அந்த வகையில் கனிமொழி மத்திய அமைச்சரை சந்தித்த பின்பு தான் இது போன்ற ஒரு அதிசயங்கள் நிகழ்ந்து, தற்பொழுது டாஸ்மாக் ஊழல் விவகாரம் குறித்து எந்த ஒரு பேச்சும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

ஆனால் மத்திய பாஜக அரசு தற்பொழுது தற்காலிகமாக அதுவும் கனிமொழிக்காக தான் அடக்கி வாசிக்கிறது என டெல்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்நிலையில் மிக பெரிய சிக்கலில் இருந்து தற்காலிகமாக உதயநிதியை காப்பாற்றிய கனிமொழிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சமீபத்தில் அவருக்கு கிடைத்த அன்பளிப்பு தான், அண்ணா அறிவாலயத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு முதல்வரே தங்கை கனிமொழியை அழைத்து அந்த இருக்கையில் அமர வைத்த நிகழ்வு என்கிறது அரசியல் வட்டாரங்கள்