அடித்து சொன்ன அமித்ஷா…. கூட்டணி ஆட்சியில் பாஜக… தமிழக முதல்வர் இவர் தான்…

0
Follow on Google News

கடந்த இரண்டு மதத்திற்கு முன்பு தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்து தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவர் அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார். அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா, வரும் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என பேசிய பேச்சு மிக பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

அதாவது அமித்ஷா வரும் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைப்பதை தான் அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவிக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர், ஆனால் அதிமுக தரப்பில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும் என விளக்கம் கொடுக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய தமிழக அரசியல் கள நிலவரம் திமுக – அதிமுக – பாஜக – த வெ க என எந்த கட்சியும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் தான் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் கூட்டணி பலம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த கூட்டணி தான் வெற்றி பெற முடியும், அதுவும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க முடியுமே தவிர, தனி பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க முடியாத சூழல் தான் தற்பொழுது தமிழக அரசியலின் களம் நிலவரமாக உள்ளது.

இந்த சூழலை நன்கு அறிந்து கொண்ட கூட்டணி கட்சிகள் அனைத்தும், இனி கொடுக்கிற தொகுதியை பெற்று கொண்டு போட்டியிட கூடாது, அதிக தொகுதிகளில் போட்டியிட்டால் தான் வெற்றி பெற்றால், ஆட்சியில் பங்கு கேட்க முடியும் என கூட்டணியை தலைமை தாங்கி கொண்டிருக்கும் கட்சிக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, காங்கிரஸ், மதிமுக , கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தற்பொழுது திமுகவிடம் அதிக சீட் வேண்டும் என குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.

அதற்கேற்றாற் போல் நடிகர் விஜய் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என கூட்டணிக்கு கூட்டணி கட்சிகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார். இப்படி ஒரு சூழலில் அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்குள் வந்து, பலமான கூட்டணி அமைந்தால் எளிதாக திமுகவை வீழ்த்தி வெற்றி பெற்று விடலாம், அதற்கான வேலையாக பாஜக மிக தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியா – அல்லது அதிமுக தனித்து ஆட்சி அமைக்குமா என்கிற குழப்பத்திற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கொடுத்து, இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்துள்ளார். நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த அமித்ஷா, லோக்சபா தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், தேசிய ஜனநாயக கூட்டணி தான் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் என தெரிவித்த அமித்ஷா.

மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் பரப்புரை மூலம் ஓட்டுகளை திரட்டினால், நிச்சயம் NDA ஆட்சி அமையும் . 2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும். அதிமுகவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் என்று அமித்ஷா தெரிவித்து கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் என்பதையும், அதிமுகவை சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் என தெளிவு படுத்தியுள்ளார். இதை அதிமுக தரப்பினரும் அரசியல் கள எதார்த்தத்தை புரிந்து கொண்டு வரவேற்க்க தொடங்கியுள்ளதை பார்க்க முடிகிறது.

மேலும் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் கூட்டணி இல்லாமல், 234 தொகுதியிலும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது போன்று சூழல் தற்பொழுது எந்த கட்சிக்கும் இல்லை, குறிப்பாக திமுகவே கூட்டணி கட்சிகள் துணை இல்லை என்றால் ஆர் கே நகர் இடைதேர்தலில் கடந்த காலங்களில் டெபாசிட் இழந்தது போன்ற ஒரு சூழல் தான் தற்பொழுது தமிழக அரசியல் களம் உள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.