மூன்று முக்கிய பதவிகள்… அண்ணாமலைக்கு என்ன பதவி… இறுதி செய்த டெல்லி தலைமை…

0
Follow on Google News

தமிழக பாஜக தலைவர் மாற்றம் நடந்து சுமார் இரண்டு மாதங்கள் நெருக்கிய நிலையில், தற்பொழுது மாநில நிர்வாக பட்டியல் வெளியாக தயார் நிலையில் உள்ளது. கடந்த ஒரு வரமாக தமிழக பாஜக தலைமை நடத்திய தொடர் ஆலோசனையில், மாநில நிர்வாக பட்டியலை இறுதி செய்து விட்டது. அந்த இறுதி செய்யப்பட்ட பட்டியல் தற்பொழுது டெல்லி தலைமையிடம் பரிசைலனையில் உள்ளதாக தகவல் வெளியானது.

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோர் புதிய மாநில பட்டியலுடன் டெல்லி சென்றவர்கள், அங்கே தேசிய பாஜக அமைப்பு செயலாளர் பி எல் சந்தோசை சந்தித்து மாநில நிர்வாக பட்டியலை கொடுத்து இருக்கிறார்கள். அந்த மாநில பட்டியலில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் பி எல் சந்தோஷ் அப்ரூவல் கொடுத்த நிலையில், எந்த நேரம் வேண்டுமானாலும் தமிழக பாஜக மாநில நிர்வாக பட்டியல் வெளியாகலாம் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

இந்நிலையில் ஒரு பக்கம் தமிழக பாஜக மாநில நிர்வாக பட்டியல் தயார் நிலையில், எந்த நேரமும் வெளியாகும் என கூறப்படும் நிலையில், மறுப்பக்கம் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை க்கு என்ன பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது என பாஜகவினர் மற்றும் அண்ணாமலை ஆதரவாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கையில், ஒரு குறிப்பிட்ட தரப்பினர் அண்ணாமலையை பாஜக டெல்லி தலைமை ஓரம் கட்டி விட்டது , அதனால் தனி கட்சி தொடங்க இருக்கிறார், என ஒரு தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

இது குறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்ததில், அண்ணாமலை தனி கட்சி தொடங்குவதற்க்கு வாய்ப்பே இல்லை என்றும், முழுக்க முழுக்க இது அண்ணாமலை இமேஜை டேமேஜ் செய்ய திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி என்றும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வின் நேரடி தொடர்பில் இன்னும் இருந்து கொண்டு தான் அண்ணாமலை உள்ளார் என உறுதி செய்கிறது டெல்லி வட்டாரங்கள். மேலும் தற்பொழுது பாஜக தேசிய தலைவராக இருக்கும் ஜெ பி நட்டா பதவி காலம் முடிந்த நிலையில், அடுத்த தேசிய தலைவர் யார் என்கிற போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

அதில் பல பாஜக முக்கிய தலைவர்கள் பெயர்கள் உள்ளனர், ஆனால் யார் அடுத்த தேசிய தலைவர் என்பதை முடிவு செய்ய இருப்பது, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் இவர்கள் மூவர் தான் என்கிறது டெல்லி வட்டாரங்கள். இந்நிலையில் வரும் ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 4 ம் தேதி வரை டெல்லியில் முகாமிட இருக்கிறார் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்.

அப்போது பிரதமர் மோடியை சந்தித்து, புதிய பாஜக தேசிய தலைவர் குறித்து முடிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஜூலை முதல் வாரத்தில் பாஜக தேசிய தலைவர் யார் என்கிற அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறது டெல்லி வட்டாரங்கள். இந்நிலையில் புதியதாக தேசிய பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு வெளியான உடன், தேசிய நிர்வாக பட்டியல் முடிவு செய்யப்பட்டும்.

அந்த தேசிய நிர்வாக பட்டியல் முடிவு செய்யும் போது, அண்ணாமலைக்கு என்ன பதவி வழங்கப்படும் என்பது இறுதி செய்யப்படும் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.அதாவது தேசிய பொதுச் செயலாளர், தேசிய இளைஞரணி தலைவர், அல்லது ராஜசபா எம்பி கொடுத்து மத்திய அமைச்சரவையில் இடம் கொடுப்பது என மூன்று முக்கிய பொறுப்புகளில் எதாவது ஒரு பதவி அண்ணாமலைக்கு கொடுக்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது.