அன்னமலைக்கு மோடி வகித்த பதவி… வெளியான அதிரடி அறிவிப்பு… கொண்டாட்டத்தில் தமிழக பாஜக…

0
Follow on Google News

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பதவியில் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி, அவரை தமிழகம் முழுவதும் கொண்டாடும் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது, அந்த வகையில் அண்ணாமலை பங்கேற்கும் முக்கிய நிகழ்வுகளில் அண்ணாமலை பெயரை கேட்டது சும்மா அதுருதுல என்று சொல்லும் அளவுக்கு, அண்ணாமலை என்ட்ரி கொடுக்கும் போதும், அவர் பெயரை மேடையில் இருக்கும் தலைவர்கள் உச்சரிக்கும் போதும், விண்ணை பிளக்கும் கரகோசத்துடன் ஆரவாரம் செய்து கொண்டாடுகிறார்கள் பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றம் செய்யப்பட்ட போதே, அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்து இருந்தார். அந்த வகையில் தேசிய அளவில் அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், மத்திய அமைச்சர், தேசிய இளைஞரணி தலைவர், தேசிய பொதுச் செயலாளர் என இந்த மூன்றில் ஒரு முக்கிய பொறுப்பு அண்ணாமலைக்கு கொடுக்க படும் என தகவல் வெளியானது.

ஆனால் கடந்த 2024ல் பாஜக மூன்றாவது முறை ஆட்சி அமைத்த போது, அண்ணாமலைக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வந்தது , ஆனால் தனக்கு தமிழக அரசியலில் தான் ஈடுபாடு உண்டு, தேசிய அரசியலில் ஈடுபாடு இல்லை என டெல்லி தலைமைக்கு தன்னுடைய விருப்பத்தை அண்ணாமலை தெரிவித்து தன்னை தேடி வந்த மத்திய அமைச்சர் பதவியை வேண்டாம் என துறந்தவர் அண்ணாமலை.

அந்த வகையில் அண்ணாமலை தற்போதைய சூழலில் மத்திய அமைச்சராக வாய்ப்பில்லை என்றும், அவர் தேசிய பொதுச் செயலாளர் அல்லது தேசிய இளைஞரணி தலைவர் இதில் இரண்டில் ஒன்று அவருக்கு உறுதி என டெல்லி உறுதி படுத்தி வந்தது. ஆனாலும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவி என்பதை சாதாரணமானது அல்ல. பிரதமர் மோடியே அந்தப் பதவியை வகித்து, பின் நாட்களில் குஜராத் முதலமைச்சர் ஆகவும், நாட்டின் பிரதமராகவும் தேர்வானார்.

பிரதமர் மோடி கடந்த 1990 முதல் 2000 வரை ஏறத்தாழ 10 ஆண்டுகள் பாஜக தேசிய பொதுச் செயலாளராக செயல்பட்டார். இதேபோல மத்திய அமைச்சர் அமித் ஷா 2010ல் பாஜக தேசிய பொதுச்செயலாளராகவும், கட்சியின் தேர்தல் வியூக நிபுணராகவும் செயல்பட்டார். இதேபோல பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாஜக தேசிய பொதுச் செயலாளராக செயல்பட்டார்.

மேலும் மறைந்த பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி தேசிய பொதுச் செயலாளராக இருந்து பின்நாளில் நாட்டின் நிதி அமைச்சராகவும் உயர்ந்தார். இதே போல பாஜக அமைப்பு செயலாளர் பி. எல். சந்தோஷ் கடந்த 2019ல் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக பதவி வகித்தார். மகாராஷ்டிராவை சேர்ந்த பிரமோத் மகாஜன் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவர்.

இவரும் கடந்த 1980 முதல் 90 வரை ஏறத்தாழ 10 ஆண்டுகள் பாஜக தேசிய பொதுச்செயலாளராக இருந்து கட்சியை வளர்த்தது குறிப்பிடத்தக்கது. இப்படி உலகிலே மிக பெரிய கட்சியான பாஜகவின் மிக முக்கிய பதவியான தேசிய பொதுச் செயலாளர் பதவி தான் அண்ணாமலைக்கு வழங்கப்பட இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி செய்துள்ளது.

மேலும் தேசிய பொதுச் செயலாளராக அண்ணாமலை நியமிக்க பட இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் தொடர்ந்து அண்ணாமலைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். முன்னாள் பாஜக எம்பி தருண் விஜய் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” – என்னும் வள்ளுவர் குறளுக்குப் பொருத்தமாக தேசிய தலைமையால் பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அண்ணாமலை அண்ணா, உங்கள் தலைமைப் பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். மேலும் தேசிய அளவில் பாஜக முக்கிய தலைவர்கள் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அண்ணாமலை தேசிய பொதுச் செயலாளர் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.