அச்சத்தில் வாக்களித்த தொகுதி மக்கள்..டூன் ஆப் ல் எடிட் செய்து விளையாடும் தருமபுரி எம்பி செந்தில்குமார்..

0
Follow on Google News

திமுக தருமபுரி எம்பி செந்தில் குமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார், இருந்தும் அந்த தொகுதியை தாண்டி வெளியில் பிரபலம் இல்லாமலே இருந்து வந்தார், எம்பியாக பதவி ஏற்ற பின் சமூக வலைத்தளத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார் தர்மபுரி எம்பி செந்திகுமார்.

பாராளுமன்றத்தில் வாழ்க தமிழ் என கோஷமிட்டு பதவி பிரமாணம் செய்து கொண்ட செந்தில்குமார் எம்பி, தனது சமூக வலைத்தளத்தில் பிழைகளுடன் தமிழில் பதிவு செய்து கடும் விமர்சனத்துக்கு ஆளாகி, அந்த விமர்சனங்கள் மூலம் வெளி உலகத்துக்கு தெரிய வந்தார். இதனை தொடர்ந்து தொகுதி வளர்ச்சியில் கவனம் செலுத்துவதில் விட, ஒவ்வொரு கட்சி தொண்டர்களுடன் வம்பிழுத்து சண்டையிட்டு ஒவ்வொரு மகிச்சியாக அவருடைய பொழுதை கழித்தார்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று முதல் அலையின் போது, தருமபுரி தொகுதி மக்கள் அச்சத்திலும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின் வாழ்வாதாரம் இழந்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்க, ஆனால் அந்த தொகுதி மக்களுக்காக களத்தில் வேலை செய்யவேண்டிய செந்தில்குமார் எம்பி, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடம் வம்பிழுத்து சண்டையிட்டு பொழுதை கழித்த சம்பவம் பெரும் விமர்சனம் ஆனது.

அவ்வப்போது சமூக வலைதளத்தில் கேலி, கிண்டலுக்கும் உள்ளாவார், அவருக்கு ஆதரவாக செயல்படும் வலைதளவாசிகள், வடிவேல் நகைச்சுவை கட்சியில் வருவது போன்று இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்கிட்டாங்களே என்பது போன்று, செந்தில்குமார் எம்பியை உசுப்பேத்தி உசுப்பேத்தி கேலி கிண்டலில் சிக்க வைத்து விடுவார்கள், அதில் ஒரு பகுதி தன தேர்தல் முடிவுக்கு முன் வலைதளவாசிகள் மீது தொடர்ந்து போலீஸ் புகார் தெரிவித்து பொழுதை கழித்தது.

பின் தேர்தல் முடிவுக்கு பின் அவர் எம்பியாக இருக்கும் தருமபுரி தொகுதிக்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி தோல்வியை தழுவியதும் சற்று அடக்கி வாசிக்க தொடங்கினார் செந்திகுமார் எம்பி. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை கோரோதாண்டவம் அடிக் கொண்டிருக்கையில், மருத்துவமனையில் படுக்கை பற்றக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, அம்புலன்ஸ் பற்றாக்குறை.

மேலும் இறந்தவர்கள் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய கூட இடமில்லாமல் மக்கள் கடும் துயரத்தில் இருக்கையில், தமிழகம் முழுவதும் முதல்வர் உட்பட எம்.எல்.ஏ மற்றும் எம்பிக்கள் என அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகையில், ஆனால் தர்மபுரி தொகுதி மக்கள் தாங்கள் வாக்களித்த தேர்தெடுக்கப்பட்ட எம்பியை எங்கே என தேடிக்கொண்டிருக்கையில், சமூக வலைதளத்தில் டூன் என்கிற ஆப் மூலம் தனது புகைப்படத்தை எடிட் செய்து அதை செந்தில்குமார் எம்பி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து விளையாடி வருவது கடும் எதிப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.