அடிக்க பாய்ந்த சி வி சண்முகம்…. JUST MISS தப்பித்தார் .. எடப்பாடிக்கு கன்னம் பழுத்திருக்கும் …

0
Follow on Google News

அதிமுக இரண்டாக உடைந்து இருக்கும் இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமிக்கு தான் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பதாக தகவல் வெளியாகி தமிழக அரசியலில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது, சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிலே வைத்து நடந்த சம்பவம் தான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் உச்சக்கட்ட அவமானத்துடன் விடைபெறும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, இதனை தொடர்ந்து அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைக்க சிறு சிறு கட்சிகளின் உதவிகளை நாடி வந்தது.இதில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்து தவித்து நிற்கும் எடப்பாடி தலைமையிலான அதிமுக எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி வி சண்முகம், எஸ் பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் கைகோர்த்து இருக்கிறார்கள்.

அதிமுக கைவசம் இருக்கும் 47 சட்டமன்ற உறுப்பினர்களில், 36 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி வி சண்முகம், எஸ் பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது, இப்படி ஒரு சூழலில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்து , ஆட்சியில் பங்கு மேலும் சிவி சண்முகத்துக்கு துணை முதல்வர் பதவி பெற்று விட வேண்டும் என்பது தொடர்பாக தவெக தரப்பில் செங்கோட்டையனிடம் தேர்தல் முடிவு வெளியான பின்பு தொடர்ந்து பேசி வந்திருக்கிறது சி வி சண்முகம் தரப்பு.

ஆனால் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடனே தொடர்பை ஏற்படுத்தி கொண்ட எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சி அமைப்பதை தவிர்க்க அதிமுக – திமுக இரண்டு கட்சிகளும் திருமாவளவனை முதல்வராக்கலம் என்கிற பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து முதல்வராக விஜய் பதவி ஏற்பதற்கு முதல் நாள் மே 9ம் தேதி சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று இருக்கிறது.

இந்த கூட்டத்தில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் , விஜயபாஸ்கர் உட்பட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.அப்போது தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பது குறித்து சி வி சண்முகம் பேசி இருக்கிறார், குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி, இதெல்லாம் சரிப்பட்டு வராது திருமாவளவன் முதல்வராக அதிமுக ஆதரவு கொடுக்கலாம், திமுகவும் ஆதரவு கொடுக்கும் நான் திமுகவிடம் பேசிவிட்டேன் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சி வி சண்முகம் இருவர்க்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்று இருக்கிறது, ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி நாற்காலியை தூக்கி எடப்பாடி பழனிசாமியை நோக்கி அடிக்க பாய்ந்து இருக்கிறார் சி வி சண்முகம், உடனே அங்கிருந்த எஸ் பி வேலுமணி விடுங்கனே விடுங்கனே என்று சி வி சண்முகத்தை சமாதானம் செய்து வைத்து இருக்கிறார்கள்.

அடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி போது என் வீட்டில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் நான் சொல்வதை கேட்டால் இங்கே பேச்சுவார்த்தை நடத்தலாம் இல்லை என்றால் வெளியே போங்க என்று எடப்பாடி பேச , அடுத்து நொடியே சி வி சண்முகம் வெளியேற அவரை தொடர்ந்து சுமார் 36 அதிமுக எம் எல் ஏக்கள் வெளியேறி இருக்கிறார்கள். இதன் பின்பு சி வி சண்முகம் வீட்டில் ஆலோசனை கூட்டம் எடப்பாடி இல்லாமல் நடந்து இருக்கிறது.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியை வெளியேற்றிவிட்டு சி வி சண்முகம் தலைமையில் அதிமுக இயங்குவதற்கான வேலைகள் மிக தீவிரமாக நடந்து வரும் நிலையில், அதிமுகவில் இருந்து சசிகலா, டி டி வி தினகரன், ஓபிஎஸ் என பலரை வெளியேற்றிய எடப்பாடி பழனிசாமி தற்போது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்கிற பழமொழிக்கு ஏற்ப அவருடைய நிலைமை அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here