50 ஆயிரம் கோடி ஊழல்… சிக்கும் முக ஸ்டாலின் மொத்த குடும்பம்…. உள்ளே வரும் சகாயம் IAS …

0
Follow on Google News

கடந்த ஐந்து வருடம் திமுக ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், குறிப்பாக திமுக ஆட்சியில் இருக்கும் பொழுதே அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் முன்னாள் அமைச்சர் கே நேருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றியது.

டாஸ்மாக் நிறுவனங்களில் சோதனை நடத்தி அங்கே நடந்த முறைகேடுகளுக்கான ஆதாரங்களை கைப்பற்றியது என பல்வேறு சம்பவங்கள் திமுக ஆட்சியிலே அரங்கேறியது. இந்த நிலையில் ஸ்மார்ட் கிளாஸ் என்கின்ற திட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள போடை 10 லட்சம் ரூபாய்க்கு கணக்கு காட்டப்பட்டு இதில் மட்டுமே சுமார் 400 கோடி ஊழல் திமுக ஆட்சியில் அரங்கேறி இருக்கிறது என்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது எழுந்துள்ளது.

மேலும் டிரான்ஸ்பார்மர் ஊழல், நிலக்கரி ஊழல் என்று திமுக கடந்தாண்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊழல் நிறைந்த ஆட்சியாகவே நடத்தி முடித்துள்ள நிலையில், தங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சில ஆதாரங்களை அழிப்பதற்கான வேலைகளிலும் திமுக இறங்கியதாகவும் கூறப்படுகிறது. மா சுப்பிரமணியன் அங்கம் வகித்த சுகாதாரத்துறை அமைச்சருக்கு கீழே அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டதில் பல்வேறு ஊழல் அரங்கேறி இருக்கிறது.

சேகர்பாவுக்கு கீழ் வரும் அறநிலையத்துறை அமைச்சரவையில் சுவாமி மலையில் லிப்ட் அமைப்பதற்கான செலவு அதிகபட்சம் 60 லட்சம் தான் என்று கூறப்படும் நிலையில் இதற்கு மட்டுமே சுமார் 3 கோடி ரூபாய் கணக்கு காட்டி இருக்கிறார்கள் என்றால் இன்னும் எவ்வளவு ஊழல் இந்த அறநிலையத்துறையில் அரங்கேறி இருக்கும் என்கின்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

இப்படி ஒரு பரபரப்பான சூழலில் தற்பொழுது ஆட்சி மாற்றம் அரங்கேறி இருக்கும் நிலையில். இதற்கு முன்பு திமுக – அதிமுக மாறி மாறி ஆட்சி அமைத்து திமுக ஆட்சியில் செய்த ஊழலை அதிமுக கண்டுகொள்ளாமலும், அதிமுக செய்த ஊழலை திமுக கண்டுகொள்ளாமல் இருவரும் தப்பித்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக விஜய் அரியணை ஏறி இருக்கிறார்.

இந்த சூழலில் கடந்த திமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை மிக தீவிரமாக விசாரித்தாலே அடுத்த மூன்று மாதத்திற்குள் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் திமுக ஆட்சியில் ஊழல் அரங்கேறி இருப்பதை கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள்.

இப்படி ஒரு சூழலில் ஐஏஎஸ் சகாயம் போன்ற ஒரு நேர்மையான அதிகாரிகளை அருகில் வைத்து கொண்டு விஜய் செயல் பட்டால் நிச்சயம் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு அதில் மு க ஸ்டாலின் மருமகன் சபரீசன் உதயநிதி ஸ்டாலின் என ஒட்டுமொத்த குடும்பமும் சீக்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஆனால் எப்படி திமுக ஊழல் செய்தால் அடுத்த அதிமுக ஆட்சி வந்ததுபோல் கண்டுகொள்ளாமல் விட்டார்களோ, அதே போன்று அதிமுக ஊழல்களை திமுக கண்டுகொள்ளாமல் விட்டது போன்று விஜய் தலைமையிலான தாவெக கண்டுகொள்ளாமல் விடுமா.? அல்லது தூண்டி துருவி எடுக்குமா என்று தமிழக மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருப்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here