நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது, குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, மேலும் கடந்த நாடளுமன்ற தேர்தலில் தனியாக 11 சதவிகித வாக்குகளை பெற்று இருந்த தமிழக பாஜக , 2026 சட்டசபை தேர்தலில் வெறும் 2.97% வாக்குகளை மட்டுமே பெற்று ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தாமரையை மலர செய்து படுதோல்வியை சந்தித்து, அரசியலிலும் பின்னடைவை பாஜக சந்தித்து இருக்கிறது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பல இடங்களில் பாஜக வேட்பாளர்கள் மூன்றாவது இடத்திற்கு படு தோல்வியை சந்தித்தாலும், இந்த தோல்விக்கு காரணம் தாங்கள் தான் என்பதை உணர்ந்து பகிரங்கமாக அரசியலில் இருந்து ஒதுங்கி கட்சியில் உழைக்க கூடியவர்களுக்கு, கட்சி தொண்டர்கள் ஏற்று கொள்ள கூடியவர்களுக்கு, மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு வழி விட்டு ஒதுங்க கூடியவர்கள், தேர்தலில் தோற்றாலும் அரசியலில் வென்று இருக்கிறோம் என்று கருத்து தெரிவித்து நாற்காலியை விட்டு கொடுக்க மாட்டோம், மீண்டும் கவுன்சிலர் தேர்தல் வந்தால் கூட நாங்க தான் போட்டியிடுவோம் என்று அடம் பிடித்து கொண்டிருப்பவர்களை , நீங்கள் கழட்டுன கழட்டு போதும் வீட்டுக்கு கிளம்புங்க என்று வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்து இருக்கிறது பாஜக தலைமை என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தற்பொழுது தமிழக அரசியலை பொறுத்தவரை , மக்களை ஈர்க்கும் வகையில் பேச கூடிய ஒரு தலைவன், குறிப்பாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய கூடிய மக்கள் விரும்பும் தலைவன், இளைஞர்களை கவரக்கூடிய ஒரு தலைவன், இப்படி பட்ட ஒருவரால் மட்டுமே தமிழ்கத்தில் பாஜகவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை உணர்ந்து இருக்கும் டெல்லி பாஜக தலைமை.
அப்படி பாஜகவுக்கு கிடைத்த பொக்கிஷமான ஒரு தலைவனான அண்ணாமலையை, பாஜகவில் இருக்கும் திராவிட ஏஜெண்டுகளின் ஆலோசனையை கேட்டு மாநில தலைமையை மாற்றியதில் விளைவு தான் தற்பொழுது தமிழகத்தில் பாஜக அடைந்திருக்கும் மிக பெரிய தோல்விக்கு காரணம் என்பதை உணர்ந்து இருக்கும் டெல்லி பாஜக தலைமை, தற்பொழுது ICU வில் இருக்கும் தமிழக பாஜகவுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்றால் அண்ணாமலை என்கிற ஒரு நபரால் மட்டுமே முடியும், ஆகையால் அண்ணாமலையை பாஜக மாநில தலைவராக நியமிக்க டெல்லி பாஜக தலைமை முடிவு செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அடுத்து மாநில தலைவராக பொறுப்பேற்க இருக்கும் அண்ணாமலைக்கு முழு அதிகாரத்தை கொடுக்க முடிவு செய்துள்ள டெல்லி பாஜக தலைமை, திராவிட ஏஜெண்டுகளாக செய்யப்பட்டு திமுகவுடன் கள்ள உறவில் இருந்து அந்தந்த மாவட்டங்களில் கடந்து 5 வருடமாக பாஜகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்து, திமுக முன்னாள் அமைச்சர்கள் தூக்கி போடும் எலும்புகளை கவ்வி கொண்டு சொத்து சேர்ந்தவர்களை களையெடுக்கும் முடிவிலும் டெல்லி பாஜக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாற்றத்திற்கு தயாராகிவிட்ட தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்க இருக்கும் நிலையில், கட்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்தால் மட்டுமே மாநில தலைவராக பொறுப்பேற்க இருக்கும் அண்ணாமலையால் தடையின்றி பாஜகவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல முடியும் அந்த வகையில் முதல் கட்டப்பணியாக பாஜகவில் இருக்கும் திராவிட ஏஜெண்டுகளை வீட்டுக்கு அனுப்பும் முடிவில் டெல்லி பாஜக தலைமை உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

