இன்னும் சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது, திமுக கூட்டணியில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை, தேமுதிக திமுக பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது, அதே போன்று அதிமுக – பாஜக கூட்டணியில் கடந்த நாடாளுமற்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் வரும் சட்டசபை தேர்தலிலும் தொடரும் என்றும், கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் மீண்டும் கூட்டணிக்குள் விரைவில் வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மற்ற கட்சிகளை விட திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பாஜக மிக தீவிரமாக வேலை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த முறை பாஜக கூட்டணி தென்மாவட்டத்தில் பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்து தன்னுடைய வாக்கு வங்கியை உறுதி செய்து இருந்தது, அந்த வகையில் தென் மாவட்டத்திற்கு பாஜக கூடுதல் கவனம் செலுத்தி வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் தென் மாவட்டத்தில் முதல் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர் ராஜன் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சரத்குமார் தென்காசி அல்லது திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, சரத்குமார் ஏற்கனவே தென்காசி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், மேலும் இதற்கு முன்பு திருசெந்தூர் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து கொண்ட முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, அவர் ஏற்கனவே காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விளவங்கோடு தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டத்தின் தலைநகரான மதுரையில் , மதுரை வடக்கு தொகுதியில் தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி பாஜக சின்னத்தில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் திருமாறன் ஜி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் பாஜக தலைமை கேட்டு கொண்டதை தொடர்ந்து, மதுரை பாராளுமன்ற தொகுதியை பெருந்தன்மையாக விட்டு கொடுத்தது மட்டுமில்லாமல், பாஜக மதுரையில் இரண்டாம் இடம் பிடிக்க காரணமாக இருந்தவர் திருமாறன் ஜி.
மதுரை தெற்கு தொகுதியில் அங்கே பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு சீட் வழங்கப்படும், அல்லது அதற்க்கு அடுத்தபடியாக இருக்கும் சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் KK சீனிவாசன் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட பழனி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் மாவட்ட தலைவர் பழனி கனகராஜ் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக அமைச்சர்களான ஐ பெரியசாமி, சக்கரபாணி ஆகிய இருவருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து பாஜக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பழனி கனகராஜ் , பழனி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் பழனி கனகராஜ் போட்டியிட்டால் அவருக்கான வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது என்கிறது கள நிலவரம்.மேலும் பரமக்குடி தொகுதியில் பொன் பாலகணபதி, கம்பம் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட தலைவர் ராஜபாண்டி, நாகர்கோவில் தொகுதியில் MR காந்தி ஆகியோரை பாஜக வேட்பாளராக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

