பாக்யராஜை அடித்து விரட்டிய இயக்குனர் பாரதிராஜா… அவமானத்துடன் வெளியேறிய பாக்யராஜ்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் நடிகராக இயக்குனராக பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் கே பாக்யராஜ். ஆரம்ப காலத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கே பாக்யராஜ். பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட படங்களில் சில காட்சிகளில் கே பாக்யராஜ் நடித்திருந்தார். மேலும் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் என்ற படத்தில்தான் கே பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.

தனது படங்கள் குறித்து விமர்சித்து 16 பக்கங்களில் தனக்கு கடிதம் எழுதிய கே பாக்யராஜை நேரில் வரவழைத்து தனது உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டவர் பாரதிராஜா. அவரது சிபாரிசு காரணமாக தான் நடிகர் கவுண்டமணியை 16 வயதினிலே படத்தில் நடிக்க வைக்கவே சம்மதித்தார். கவுண்டமணி அந்த படத்தில் நடிப்பதில் பாரதிராஜாவுக்கு விருப்பமே இல்லை. அதே நேரத்தில் உதவி இயக்குனர் கே பாக்யராஜ் சொன்னதால் மறுக்க முடியாமல் கவுண்டமணி நடிக்க சம்மதித்தார்.

அப்படி ஒரு குரு சிஷ்யன் உறவு முறை பாரதிராஜா, கே பாக்யராஜ் இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக நீடித்திருக்கிறது. இதற்கிடையே ஒரு தடவை பாரதிராஜா, பாக்யராஜை அடித்து விரட்டிய சம்பவமும் நடந்திருக்கிறது. ஒருமுறை இருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. அப்போது கே பாக்யராஜை, நீ எனக்கு வேண்டாம் போ என்று கோபத்தில் அடித்து விரட்டிவிட்டார் பாரதிராஜா.

அதன்பிறகு இயக்குனர் பாரதிராஜா, புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அப்போது தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக படம் இயக்கும் முயற்சியில் அவர் இருந்த போது, நடிகர் கமல்ஹாசன் இயக்குனரும் நடிகருமான மனோபாலாவை, பாரதிராஜாவிடம் அனுப்பி இருக்கிறார். பாரதிராஜாவை, மனோபாலா நேரில் சென்று பார்த்திருக்கிறார். அப்போது ஒரு அறையில் கதை விவாதம் நடந்துக்கொண்டு இருந்துள்ளது.

நீங்கதான் பாரதிராஜாவா? நடிகர் கமல்ஹாசன் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார் என்று பாரதிராஜாவிடம், மனோபாலா கூறியிருக்கிறார். சிறிது நேரம் அங்கு நடந்த கதை விவாதத்தை கவனித்த மனோபாலா, பிறகு பாரதிராஜாவை தனியாக அழைத்து, இந்த கதையைவா படமா எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு பாரதிராஜா ஆமாம் என்று சொல்ல, இந்த படம் ஓடாது என்று மனோபாலா துணிச்சலாக பாரதிராஜாவிடமே கூறியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாரதிராஜா, உள்ளே இருப்பவர்கள் யார் தெரியுமா என்று கோபமாக கேட்டிருக்கிறார். அதெல்லாம் எனக்கு தேவையில்லை. நான் அனைத்து மொழி படங்களையும் பார்க்கிறவன். ஹாலிவுட் படங்கள் வரை பார்க்கின்றவன். என்னோட சினிமா அறிவை பயன்படுத்தி சொல்கிறேன். இந்த படம் சத்தியமாக ஓடாது. உங்களிடம் பாக்யராஜ் என்று ஒருவர் இருந்தாரே, எங்கே அவர் என்றும் மனோபாலா கேட்டிருக்கிறார்.

உடனே பாரதிராஜா, அவனுக்கும் எனக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஆகிவிட்டது. அடித்து விரட்டி விட்டேன் என்றும் கூறியிருக்கிறார். அதற்கு மனோபாலா, என்ன சார் புதுசா கம்பெனி ஆரம்பிக்கும்போது நல்ல திறமைசாலிகளை அருகில் வைத்துக் கொள்ள மாட்டீர்களா? என்று கேட்டுவிட்டு, பாக்யராஜை அழைத்து வரச் சென்றிருக்கிறார். அப்போது பாக்யராஜ் ஒரு ஓட்டலில் தங்கி கதை எழுதிக் கொண்டு இருந்திருக்கிறார்.

அவரை நேரில் சந்தித்த மனோபாலா, பாரதிராஜா சாருடன் வந்து பணியாற்றுங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்று கூறி அழைத்து வந்திருக்கிறார். முதலில் மறுத்த பாக்யராஜ் அதன் பின்னர் கொஞ்சம் பொறுமையாக எடுத்து கூறிய பின்பு, புரிந்து கொண்டு பாரதிராஜாவுடன் வந்து இணைந்திருக்கிறார்.

error: Content is protected !!