ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பேசிய பேச்சு மிகப் பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது. அதாவது கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பல மாநிலங்களில் சேர்க்கப்பட்ட கள்ள ஓட்டு காரணமாகவே பாஜக வெற்றி பெற்றது என்றும், குறிப்பாக கர்நாடகாவில் பிஜேபி வெற்றி பெற்ற ஒரு தொகுதியில், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் முறையீடாக சேர்க்கப்பட்டுள்ளது என்று ஆதாரம் இல்லாமல் பல குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்பு EVM மிஷின் முறைகேடு மூலம் பாஜக வெற்றி பெற்றது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டுகள் வைத்து வந்த நிலையில் தற்போது வாக்காளர்கள் முறையீடாக சேர்க்கப்பட்டுள்ளது என்று ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள் ராகுல் காந்தி. மேலும் ஒரு கட்சி தொடர்ந்து ஆட்சி செய்தால் அந்த ஆட்சிக்கு எதிராக மனநிலையில் மக்கள் இருப்பார்கள், அப்படி இருக்கும் பொழுது எப்படி தொடர்ந்து மோடி மூன்று முறை வெற்றி பெற முடியும் என்று ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி மிகப்பெரிய கேலிக்கூத்தாக அமைந்துள்ளது.

குறிப்பாக எந்த ஒரு ஆட்சியும் மக்களுக்கு எதிராக இருந்தால் தான் மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தி ஏற்பட்டு அந்த ஆட்சியை அகற்ற மக்கள் முன்வருவார்கள். அப்படி இருக்கும் பொழுது ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு மிகப்பெரிய கேலிக்கூத்தாக அமைந்துள்ளது. அதே போன்று காங்கிரஸ் எந்த ஒரு மாநிலத்துலயும் தொடர்ந்து இரண்டு முறை தோல்வியைப் பெற்றால் அடுத்து அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாத ஒரு சூழல்தான் ஏற்பட்டு இருக்கிறது அதில் தமிழ்நாடு முன் உதாரணம்.
இந்த நிலையில் தேர்தல் கமிஷன் தற்பொழுது ராகுல் காந்தியின் பொய்யான பேச்சுகளுக்கு தக்க பாடம் புகட்ட கொடுக்க முன் வந்திருக்கிறது, அதாவது ராகுல் காந்தி பொதுவான இடங்களில் போகிற போக்கில் வாய்க்கு வந்ததை பேசாமல், பிரமாண பத்திரத்தில் அவர் கொடுக்கும் குற்றச்சாட்டை உறுதி மொழியாக எழுதிக் கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தி பொது இடங்களில் தேர்தல் ஆணையம் குறித்து தெரிவித்த குற்றச்சாட்டுகள் பிரமாண பத்திரத்தின் உறுதி மொழியாக எழுதிக் கொடுத்தால், ராகுல் காந்தி பேசியது பொய் என்று நிருபிக்கப்பட்டால், அவருடைய பதவி நீக்கப்படும், மேலும் தேர்தல் ஆணையத்தால் அவருடைய வாக்கு உரிமையை பறிக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்பு மத ரீதியாக பேசியதாக பால் தாக்ரே க்கு ஆறு வருடம் ஓட்டு போட உரிமை மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திற்கு இணையான ஒரு தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் தற்பொழுது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
ஒரு வாரத்திற்குள் ராகுல் காந்தி இதற்கு பதில் அளிக்கவில்லை என்றால் உயர்நீதிமன்ற மூலமாக தேர்தல் ஆணையம் வழக்கு தொடுத்து அவர் உடைய பதவி பறிப்பதற்கும், அவர் வாக்களிக்க தடை விதிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே கேலிக்கூத்தாகும் வகையில் ராகுல் காந்தி இந்திய தேர்தல் ஆணையம் குறித்து தெரிவித்துள்ள இந்த கருத்திற்கு, தகுதி நீக்கம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.
அதனால் இனி வரும் காலங்களில் ராகுல் காந்தி ஏற்கனவே எப்படி ரபேல் விவகாரங்களில் மன்னிப்பு கேட்டாரோ அதேபோன்று தேர்தல் ஆணையத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்ததற்காக அவர் மன்னிப்பு கேட்டு தப்பிப்பதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

