அமித்ஷா அதிரடி உத்தரவு… ஓபிஎஸ் யிடம் பேசிய அண்ணாமலை… தலைகீழாக மாறிய கூட்டணி ….

0
Follow on Google News

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் NDA கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் தற்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் கூட்டணிக்குள் வேண்டும் என்பதில் டெல்லி பாஜக தலைமை உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது. குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 11 சதவீதம் வாக்கு வங்கியை நிரூபித்து காண்பித்தது. இதற்கு முக்கிய காரணம் தென் மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற தலைவர்களாக இருக்கக்கூடிய ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், திருமாறன் ஜி போன்றவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றதுதான், தென் மாவட்டங்களில் பாஜகவால் அதிக வாக்குகளை அறுவடை செய்ய முடிந்தது.

குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற ஓ பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 30 சதவீதம் வாக்குகள் பெற்று தன்னுடைய பலம் என்ன என்பதை நிரூபித்து காட்டி இருந்தார். அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்ததும், எடப்பாடி தலைமையிலான அதிமுக சரிந்ததையும் பார்க்க முடிந்தது.

இதற்கு முக்கிய காரணம் முக்குலத்தோர் சமுதாயத்தின் பெரும் ஆதரவு பெற்ற ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், திருமாறன் ஜி ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றதுதான். இந்நிலையில் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறிய ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து மத்திய பாஜக அரசையும் விமர்சனம் செய்து வந்தார்.

ஆனால் ஓ பன்னீர்செல்வத்தின் விமர்சனத்திற்கு தமிழக பாஜகவின் தலைவர்கள் யாரும் பதில் விமர்சனம் செய்யவில்லை. இதற்கு முக்கிய காரணம் பாஜக டெல்லி தலைமை ஓ பன்னீர்செல்வம் பாஜகவை விமர்சனம் செய்தாலும் பாஜக தலைவர்கள் யாரும் திரும்ப விமர்சனம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் மீண்டும் ஓ பன்னீர்செல்வத்தை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் டெல்லி பாஜக தலைமை உறுதியாக இருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து ஓ பன்னீர் செல்வத்திற்கும் அண்ணாமலைக்கும் நல்ல நெருங்கிய உறவு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலை யிடம் மீண்டும் ஓ பன்னீர்செல்வத்திடம் பேசி கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

உடனே தொலைபேசியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ஓ பன்னீர் செல்வத்தை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார், அண்ணே நீங்க திரும்ப கண்டிப்பா கூட்டணிக்குள் வர வேண்டும், உங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது என்பது எனக்கு நன்கு தெரியும், தென் மாவட்டங்களில்உங்களுக்கான வாக்கு வங்கியை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபித்து இருக்கிறீர்கள்.

உங்களுக்கான உரிய முக்கியத்துவத்தை நிச்சயம் பாஜக தரும் அண்ணே, நீங்க மீண்டும் கூட்டணிக்கு வரவேண்டும் என்று ஓ பன்னீர்செல்வதிடம் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. இருந்தும் தன்னுடைய ஆதரவாளரிடம் ஆலோசித்து பதில் சொல்கிறேன் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.