வெளியான பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல்… யார் யாருக்கு எந்த தொகுதி… அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது..

0
Follow on Google News

வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியல் மற்றும் எந்தந்த தொகுதி என்பது வெளியாகியுள்ளது.சென்னையில் மூன்று தொகுதிகளில் பாஜக போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, அதில் தி நகர் தொகுதியில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் போட்டியிட இருக்கிறார், இவர் ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சென்னை மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்டது குறிப்பிடதக்கது. அடுத்ததாக அண்ணாநகர் தொகுதியில் பாஜக மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி போட்டியிட இருக்கிறார்.

சென்னை வேளச்சேரி தொகுதியில், பாஜக மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர் போட்டியிட இவர்கிறார்.பாஜகவில் பல பொறுப்புகளில் இருந்தவர், பல தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட டால்பின் ஸ்ரீதர் பாஜக மூத்த தலைவர்களிடன் நன் மதிப்பை பெற்றவர் , கடந்த 1 வருடங்களுக்கு மேலாக சென்னை வேளச்சேரி தொகுதியில் மிக தீவிரமாக களப்பணி செய்து வரும் டால்பின் ஸ்ரீதர் ஆர் எஸ் எஸ் பின்னணி கொண்டவர் என்பதும் குறிப்பிடதக்கது.

அடுத்ததாக கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார், மதுரையில் பாஜக இரண்டு தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. அதில் மதுரை வடக்கு தொகுதியில் கூட்டணி கட்சி சார்பில் தென் இந்திய பார்வேர்ட் ப்ளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி தாமரை சின்னத்தில் போட்டியிட இருக்கிறார். தென் மாவட்டத்தில் பெரும்பாண்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கும் திருமாறன் ஜி பாஜக சார்பில் போட்டியிடுவதால், பாஜக – அதிமுக கூட்டணிக்கு தென் மாவட்டத்தில் முக்குலத்தோர் சமூகத்தின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறது தேர்தல் கள நிலவரம்.

அடுத்ததாக மதுரை தெற்கு தொகுதியில் பாஜக வேட்ப்பாளராக கே கே சீனிவாசன் போட்டியிட இருக்கிறார், ஆர் எஸ் எஸ் பின்னணி கொண்ட இவர் தொடர்ந்து பாஜகவில் பல்வேறு பதவிகளை, வகித்தவர். மதுரை தெற்கு தொகுதியில் முக்குலதோர் சமூகத்திற்கு அடுத்தபடியாக சௌராஷ்டிரா சமூகம் உள்ளது அந்த வகையில் சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த பிறவியிலே செல்வேந்தரான கே கே சீனிவாசன் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட இருப்பது சௌராஷ்டிரா சமூகத்திற்கு கிடைத்த அங்கீகாரமான அந்த தொகுதியில் இருக்கும் சௌராஷ்டிரா சமூக மக்கள் பார்க்கிறார்கள்.

அடுத்ததாக திருநெல்வேலி தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாங்குநேரி தொகுதியில் தமிழிசை சௌந்தர் ராஜன், விளவங்கோடு தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி , மற்றும் நாகர்கோவில் தொகுதியில் தற்பொழுது சீட்டிங் எம் எல் ஏ வாக இருக்கும் எம் ஆர் காந்தி, திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் ஆகியோர் பாஜக வேட்பாளராக போட்டியிட இருக்கிறார்கள்.

கொங்கு மண்டலத்தில் கிணத்துக்கடவு தொகுதியில் வசந்தராஜன், திருப்பூர் தெற்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம், ஈரோடு கிழக்கு தொகுதி ஜி கே நாகராஜன் , அரவ குறிஞ்சி தொகுதியில் செந்தில் நாதன் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிட இருக்கிறார்கள். மற்றும் வேலூர் தொகுதியில் கூட்டணி கட்சி சார்பில் ஏ சி சண்முகம் போட்டியிட இருக்கிறார்கள், கே வி குப்பம் பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி போட்டியிட இருக்கிறார்.

ராசிபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக வி பி துரைசாமி, பேராவூரணி தொகுதியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்,பரமக்குடி தொகுதியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் போன் பாலகணபதி, நெய்வேலி தொகுதியில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிட இருப்பதாக உத்தேச பட்டியில் வெளியாகியுள்ளது.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தாம் விரும்பும் தொகுதியில் போட்டியிடலாம் என கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.