தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், கட்சி பெயரை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில், தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் கட்சியின் பெயர் மக்கள் மத்தியில் சென்றது, அந்த வகையில் விஜய் எதை செய்தாலும், அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டியது அவருக்கு மிக சுலபம், இதற்கு முக்கிய காரணம், விஜய் சினிமா பிரபலம் என்பதை தாண்டி அவருக்கு பின்னால் இருக்கும் லட்ச கணக்கான ரசிகர்கள்.
இந்நிலையில் என்ன தான் விஜய்க்கு லச்சக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் கூட, பீகாரில் பிரசாந்த் கிஷோர் நிலைமை தான் தமிழகத்தில் விஜய்க்கு என்கிறது சர்வே ரிப்போர்ட். நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 243 தொகுதிகளில் 241 தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்தது. அதேபோல், தமிழக வெற்றிக் கழகமும் 234 தொகுதிகளில் 180 தொகுதிக்கு மேல் தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழக்க நேரிடலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்க்கு ஒரு தொகுதிக்கு 15,000 முதல் 20,000 வாக்குகள் பெறுவது தனக்கான வாக்கு வாங்கிய நிர்ணயம் செய்யலாமே தவிர அது டெபாசிட் தொகையை மீட்டுக் கொடுக்குமா என்பது சந்தேகம் . தொகுதிக்கு 20 அயிரம் வாக்குகள் விஜய் பெற்றால் கூட தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சத்திற்கு மேல் விஜய் வாக்குகளை பெறலாம் ஆனால், அவரால் ஒரு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறுவதே கடினம் என்கிறது சர்வே ரிப்போர்ட்.
பிரசாந்த் கிஷோர் எந்த கட்சி வெற்றி பெற போகிறதோ, அந்த கட்சிக்கு வேலை செய்து, அந்த வெற்றிக்கு காரணம் தான் தான் என க்ரெடிட் எடுத்து கொள்ள கூடியவர், அதனால் தான் மற்ற கட்சிகளுக்கு வியூகம் வகுத்து வெற்றி பெற செய்த பிரசாந்த் கிஷோர் சொந்த கட்சியை வெற்றி பெற செய்ய முடியவில்லை. ஆனால் பிரசாந்த் கிஷோர் போன்று மிக மோசமான தோல்வியை விஜய் சந்திக்க மாட்டார் என்றாலும் கூட, விஜய் எதிர்பார்ப்பது போன்று அரசியல் இல்லை என்பது வர இருக்கும் தேர்தல் அவருக்கு உணர்த்தும்.
குறிப்பாக ஒரு கட்சியின் வேட்பாளராக போட்டியிட கூடியவர்களுக்கு உள்ளூர் செல்வாக்கு மிக அவசியம், ஆனால் விஜய் கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களான நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன், ஐ.ஏ.எஸ் அருண்குமார் போன்ற நிர்வாகிகள் அவர்கள் சொந்த ஊரில் கவுன்சிலருக்கு நின்றாள் கூட வெற்றி பெறுவார்களா என்பது சந்தேகம், அந்த வகையில் உள்ளுரிலே செல்வாக்கு இல்லாதவர்கள் விஜய் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவராக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் , அதிமுக அல்லது திமுக என யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டோம், எங்கள் தலைமையில் தான் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என வரும் தேர்தலை சந்தித்தால், விஜய் போட்டியிடும் தொகுதியில் மட்டும் வேண்டும் என்றால், கடுமையான போட்டியை கொடுக்கலாமே தவிர மற்ற எந்த தொகுதியிலும் இரண்டாம் இடம் பிடிப்பது கூட சாத்தியம் இல்லை என்கிறது தேர்தல் கள நிலவரம்.
ஆனால் விஜய் போட்டியிடும் தொகுதியில் அவர் வெற்றி பெற்றால், அடுத்து ஒரு எம் எல் ஏ வை வைத்து கட்சியை அடுத்த கட்டத்துக்கு எப்படி வளர்த்தெடுப்பார் என்கிற பல கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக தனியாக சட்டமன்ற சென்று , என்ன விஜய்யால் செய்துவிட முடியும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அந்த வகையில் தனியாக தான் நிற்போம், நாங்கள் தான் முதல்வர் வேட்பாளர் என்றே விஜய் அடம் பிடிப்பது, அவருடைய அரசியலுக்கான முடிவுரையை அவரே எழுத போகிறார் என்பது தான் நிதர்சம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
உள்ளூரில் செல்வாக்கு இல்லாத தலைவர்களை வைத்து விஜய் என்ன தான் வரும் 2026 சட்டசபை தேர்தலில் செய்ய போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

