65 போலி வாக்காளர்கள் நீக்கம்… SIR யாருக்கு பாதிப்பு… பீகார் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடம்…

0
Follow on Google News

நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் NDA கூட்டணி மிக பெரிய வெற்றியை பெற்றது, ஆனால் பீகாரில் இந்தி கூட்டணி தோல்வியை ஏற்றுக்கொவதற்கு பதிலாக SIR மீது பழியை தூக்கி போட்டது. இந்நிலையில் தற்பொழுது சிறப்பு தீவிர திருத்தம் என்கிற SIR , என்ன என்கிற விவாதம் அனல் பறந்த வரும் நிலையில் , முதலில் SIR என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்பது வாக்காளர் பட்டியலை சரி செய்வதாகவும், இதில் இறந்தவர்கள் வாக்குகள் நீக்கப்பட்டு, மேலும் தகுதி இல்லாதவர்கள் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குகள் உள்ளதா என்பதை ஆராய்ந்து, அப்படி அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குகள் இருந்தால் அதை கண்டறிந்து நீக்குதல் போன்ற நடவடிக்கை தான் SIR

குறிப்பாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திட, தகுதியான வாக்காளர்கள் மட்டுமே வாக்கு அளிக்க வகை செய்யும் வகையில் உள்ளது தான் SIR . பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு, கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி முதல் SIR பணிகள் முதல்கட்டமாக தொடங்கி, ஒரு மாதத்திற்குள் நிறைவடைந்தது, இதில் சுமார் 21.5 லட்சம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டு, சுமார் 65 லட்சமா தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டது. இறுதியாக பிஹாரில் 7.42 கோடி வாக்காளர்கள் இறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அடுத்து மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுசேரி ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த மாநிலங்கள் உட்பட 12 மாநிலங்களில், SIR இரண்டாம் கட்ட பனி தொடங்கி இருக்கிறது. ஆனால் தொடர்ந்து இந்தி கூட்டணி இந்தியா முழுவதும் அடைந்து வரும் தேர்தல் தோல்வியை திசை திருப்ப, மக்களை மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் SIR குறித்து பொய்யான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து வருகிறது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

தேர்தல் தோல்விகளை ஏற்று கொண்டு, மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் , தேர்தல் ஆணையம் மீது குற்றசாட்டு வைக்கும், இந்தி கூட்டணி, ஜார்கண்ட் , ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆட்சியை பிடித்த போது, ஏன் இதே போன்று தேர்தல் ஆணையம் மீது குற்றசாட்டுகளை முன் வைக்கவில்லை தேர்தல் ஆணையம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது சுமார் 9 முறை SIR நடைமுறை படுத்தப்பட்டது, இது எதோ தற்பொழுது பாஜக அரசு புதியதாக கொண்டு வந்தது போன்று எதிர்கட்சிகள் எதிர்த்து வருவது, அரசியல் நாடகம் என்பது அம்பலமாகி உள்ளது. பீகார் தேர்தலில் முறைகேடு நடத்துள்ளது என குற்றச்சாட்டும் எதிர்க்கட்சிகள், ஏன் இதுவரை மருவாக்கு பதிவு கோரவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் பீகாரில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 66.91%வாக்குகள் பதிவாகி இருப்பதும், மேலும் பெண்கள் பெருமளவு வாக்கு அளித்துள்ளது SIR செயல்முறைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வாக்காளர்கள் SIR செயல்முறை மூலம் நீக்கப்பட்டால் எப்படி வரலாற்றில் இல்லாத அளவுக்கு இவ்வளவு வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும், அந்த வகையில் வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல் தான் SIR என்கிற எதிர்க்கட்சிகள் குற்றசாட்டு பொய் என்பதை நிரூபித்து இருக்கிறது பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு பதிவுகளின் வாக்கு சதவிகிதம்.

அந்த வகையில் மத்திய பாஜக அரசை எதிர்த்து அரசியல் செய்ய எந்த ஒரு காரணம் இல்லாததால், தற்பொழுது SIR செயல்முறை வாக்காளர்களின் வாக்குகளை திருட படுவதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஈடுபடவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.